இவரு தான் எங்களுக்கு கீ பவுலர், அது பும்ரா இல்லை – ரோகித் சர்மா சொல்வது இவரைதான்!

0
166
Rohit sharma

ஐபிஎல்-ல் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். மேலும் இந்திய அணிக்கும் சிறப்பாக செயல்படுகிறார் என்று இளம் வேகப் பந்துவீச்சாளரை ரோகித் சர்மா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒருமாத காலத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய அணி நிர்வாகம் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதை வைத்து பல்வேறு அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை மட்டுமே எடுத்துச் செல்கிறது. அதிலும் ஒரு அனுபவம் இல்லாத இளம் வீரரான அர்ஷதீப் சிங் இடம்பெற்று இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலியா மைதானங்களில் போதிய அனுபவமில்லை என்பதால் எந்த அளவிற்கு இவரது பந்துவீச்சு எடுபடுமென்று கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

அத்துடன் ஆஸ்திரேலியா மைதானங்களில் அதிக அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி 15 பேர் கொண்ட வீரர்களில் எடுக்கப்படாமல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தீபக் சகர் சமீப காலமாக பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தீபக் ஹூடா-விற்கு பதிலாக இவரை எடுத்திருக்கலாம் என்று மற்றொருபுற விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் இளம் வேகம் பந்துவீச்சாளரான அர்ஷதீப் சிங் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் மேலும் அவரது துடிப்பான ஆட்டம் இந்திய அணிக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பது பற்றி சமீபத்திய பேட்டியில் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

- Advertisement -

“அர்ஷதீப் சிங் பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. மிக துல்லியமாக அழுத்தம் நிறைந்த சூழலில் யார்கர் வீசுகிறார். அதுவும் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் தனது முதல் வருடத்திலேயே இவ்வளவு சிறப்பாக இந்திய அணிக்கு செயல்பட்டு வருகிறார். இளம் வீரராக இருந்து கொண்டு துடிப்புடன் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் மிகவும் இயல்பாக பந்துவீசுகிறார். அவரிடம் எவ்வித ஆர்ப்பரிப்பும் இல்லை. தனது அடிப்படையான பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படுவதால் அவர் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். அதன் காரணமாக இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மிக முக்கியமாக தேவை. அந்த இடத்தை நிரப்புவதற்கு இவர் சரியான வீரராகவும் இருக்கிறார். ஐபிஎல்லில் எப்படி நன்றாக பங்களிப்பை கொடுத்தாரோ அதேபோல இந்தியாவிற்கும் கொடுத்து வருகிறார். ஆஸ்திரேலிய மைதானங்களில் இடது கை வந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் அவசியம் என்பதால் அவர் இந்திய அணிக்கு ஒரு மிக முக்கியமான வீரராகவும் இருப்பார் என நான் கருதுகிறேன். அவரை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்.” என்றார்.