இவர் எங்களை விளையாட விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார் – இந்திய வேகப்பந்து வீசாளரை புகழ்ந்து பேசிய மார்க் பவுச்சர்

0
288
Mark Boucher

ஐ.பி.எல் தொடர் முடிந்து தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஐ.பி.எல் தொடரின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா இருவரும் மறுவாய்ப்பு பெற, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் இருவரும் முதல் வாய்ப்பைப் பெற்றார்கள்.

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல் விலக, புதிய கேப்டனாக ரிஷாப் பண்ட்டை அறிவித்தது இந்திய அணி நிர்வாகம்.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்று 2-0 என பின்தங்கி இருந்து, பின்பு அடுத்தடுத்த போட்டிகளில் வென்று தொடரை 2-2 என சமநிலைக்குக் கொண்டுவந்தது. இதனால் கோப்பையைத் தீர்மானிக்கும் போட்டியாக ஐந்தாவது போட்டி மாற, போட்டிக் குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாகியது.

இந்தத் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று பெங்களூர் சின்ன சுவாமி மைதானத்தில் துவங்கியது. டெம்பா பவுமா காயம்பட்ட காரணத்தால், தென் ஆப்பிரிக்க கேப்டனாக வந்த கேசவ் மகராஜ் டாஸில் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தார். இஷான் கிஷான், ருதுராஜ் ஜோடி பேட்டிங் செய்ய வர மழையும் வந்துவிட்டது. இதனால் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. ஆனால் 3.3 ஓவர்களில் 28-2 என இந்திய அணி இருந்தவேளையில், மீண்டும் வந்த மழை நிற்கவே இல்லை. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டு, தொடர் 2-2 என சமநிலையில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார்!

இதுகுறித்துப் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறும்பொழுது “புவனேஷ்வர் குமார் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசினார். இந்தத் தொடரில் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். புவனேஷ்வர்குமார் இந்தத் தொடர் முழுவதும் பவர்ப்ளேவில் அதிக அழுத்தத்திலேயே வைத்திருந்தார். டெல்லி தவிர மற்ற ஆட்டங்களில் நாங்கள் நல்ல துவக்கத்தையே பெற்றோம். அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -