கடினமான ஓவர்களை வீசும் மனதைரியம் இவரிடம் உண்டு – இளம் வேகப்பந்து வீச்சாளர் பற்றி பெருமை பாடியுள்ள கௌதம் கம்பீர்

0
69

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் முதல் ஓவரில் 15 ரன்கள் கொடுத்து இருந்தாலும் அதற்கு அடுத்து வீசிய 3 ஓவர்களில் மொத்தமாகவே 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அப்போட்டியில் பந்துவீச்சு எக்கானமியில் 9 க்கு கீழ் பந்து வீசிய பந்து வீச்சாளரும் அவரே. எனினும் அவரால் அப்போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் லக்னோ அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பீர் ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

ஐபிஎல் மட்டுமே அவருடைய இலக்காக இருக்க கூடாது

- Advertisement -

முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்தாலும் அதற்கு அடுத்து மிக சிறப்பாக அவர் மீண்டு வந்தார். கடினமான ஓவர்களை வீசும் மன தைரியம் அவருக்கு இருக்கிறது. இளம் வேகப்பந்து வீச்சாளரான அவர் இனி வரும் போட்டிகளில் தனது பந்து வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கௌதம் கம்பீர் அறிவுரை கொடுத்திருக்கிறார். மேலும் பேசிய அவர் அவருடைய இலக்கு ஐபிஎல் தொடர் உடன் முடிந்து விடக்கூடாது. உலகக் கோப்பை டி20 தொடர் வருகிறது அது அவருடைய எண்ணத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு 3 டி20 போட்டிகளில் இதுவரை ஆவேஷ் கான் விளையாடி இருக்கிறார். அதில் அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பந்துவீச்சு எக்கானமி 8 ஆக உள்ளது. இருப்பினும் அவர் இன்னும் சிறப்பாக பந்து வீச வேண்டும்.

- Advertisement -

உலக கோப்பை டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் விளையாட போகின்றனர். அவர்களுக்கு பேக்-அப் வீரர்களாக அணியில் இடம் பிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்பொழுது l இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் மோசின் கான் ஆகியோர் இருக்கும் நிலையில் ஆவேஷ் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

மோசின் கான் ஆவேஷ் கானை சிறந்த நிலைக்கு தள்ளினார்

லக்னோ அணியில் மோசின் கான் 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருடைய பந்துவீச்சு எக்கானமி 5.96 மட்டுமே. ஐபிஎல் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்களில் சிறந்த எக்கானமி வைத்திருந்த வீரரும் இவர்தான்.

லக்னோ ஒளியில் இவரது ஆட்டம் ஆவேஷ் கானை இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற கட்டத்திற்கு தள்ளியது. மோஷன் கான் சிறப்பாக விளையாடியதால் ஆவெஷ் கானும் இன்னும் சிறப்பாக போட்டிபோட்டுக்கொண்டு விளையாடினார். இது உண்மையில் ஆரோக்கியமான விஷயம். அணியில் உள்ள ஒரு வீரர் மற்றொரு வீரருக்கு உந்துசக்தியாக அவரை சிறப்பாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளினால், அணிக்கு அது நல்லதுதான் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -