டி20க்கு ஹர்திக் பாண்டியா மாதிரி.. ஒருநாள் போட்டிக்கு அடுத்த கேப்டன் இவர் தான்; ரோகித் சர்மாவை சீக்கிரம் தூக்கிடுவாங்க – முன்னாள் வீரர் பேட்டி!

0
1980

ஒருநாள் போட்டிகளுக்கு அடுத்த கேப்டன் இவர்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் மணிந்தர் சர்மா.

வங்கதேசம் சென்று ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கடைசி ஒரு விக்கெட்டிற்கு கிட்டத்தட்ட 51 ரன்கள் வெற்றி பெறுவதற்கு தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி அந்த விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்திய அணி இப்படி ஒரு நிலையை தொடர்ந்தால் ஒருநாள் போட்டிக்கான உலககோப்பைக்கு முன்பு நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று முன்னாள் வீரர் மனிந்தர் சிங் தெரிவித்தார்.

அதேபோல் ஏதேனும் மிகப்பெரிய தவறு நேர்வதற்குள் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை மாற்றுவது பற்றியும் அல்லது 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பின் புதிய ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக வருவதற்கும் இவர்தான் சரியான வீரர் என்றும் தனது கணிப்பில் தெரிவித்தார். அவர் பேசியதாவது:

ஷ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்லாது சிறப்பான கேப்டனும் கூட. ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை நன்றாக வழி நடத்தினார். அதன் பிறகு காயம் காரணமாக விளையாடவில்லை என்றாலும் காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அபாரமாக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது கொல்கத்தா அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய போது நேர்மறையாக செயல்பட்டார். பேட்டிங்கில் எந்த வித அழுத்தமும் இல்லாமல் சிறப்பாக விளையாடியிருக்கிறார். பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு விளையாடுவேன் என்று இல்லாமல், வந்த முதல் பந்திலிருந்தே பவுண்டரி கிடைக்கவில்லை என்றால், அதை ஒன்று அல்லது இரண்டு ரன்கள் ஆக மாற்றி இடைவிடாமல் ரன்களை எடுத்து வருகிறார்.

கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார். டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது போன்று ஓரிரு தொடர்களில் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கப்பட்டு சில பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்திய அணியின் எதிர்கால கேப்டனை இப்போது இருந்து உருவாக்க வேண்டும். தவான் நன்றாக வழி நடத்துகிறார் கிடைக்கும் வாய்ப்புகளில். ஆனால் அவருக்கு இன்னும் நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லை. கே எல் ராகுல் அவரது பேட்டிங்கை மீட்டு வருவதற்கே போராடி வருகிறார். கேப்டன் பொறுப்பேற்று விளையாடும் பொழுது பேட்டிங்கில் போதிய கவனம் செலுத்த இயலாமல் போகலாம். அப்படித்தான் அவரது சமீபத்திய ஆட்டங்கள் இருக்கிறது.” என்றும் சாடினார்.