இவரிடம் திறமையுள்ளது, ஆனால் 1-2 போட்டியில் நன்றாக விளையாடிவிட்டு பின்னர் சுமாராக ஆடுவார் – இளம் இந்திய வீரர் குறித்து கபில் தேவ் கவலை

0
116

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இந்திய அணியில் நுழைய போகும் வீரர்கள் நான்கு பேர் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெளிப்படையாக ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

நல்ல வீரர்தான் ஆனால் அவரிடம் தொடர்ச்சியான சிறந்த ஆட்டம் இல்லை

- Advertisement -

இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷன் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ரிஷப் பண்ட் அனைத்து போட்டியிலும் தற்போது தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக், இஷன் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள். இந்த மூவரில் விக்கெட் கீப்பிங் என்று வந்துவிட்டால் அனைவரும் மிக சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள்.

ஆனால் பேட்டிங்கில் இந்த மூவரில் சஞ்சு சாம்சன் மட்டும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்று கபில்தேவ் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி விட்டு அதன் பின்னர் சுமாராக விளையாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரிடம் திறமை இருக்கிறது ஆனால் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார்”, என்று கபில்தேவ் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன்

சர்வதேச அளவில் இந்திய அணிக்கு 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 13 போட்டிகளில் இதுவரை அவர் மொத்தமாக 174 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு வருடங்களில் மிக அற்புதமாகவே அவர் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ச்சியாக 400க்கும் மேல் ரன் குவித்து வருகிறார் ( 2021 – 484 ரன்கள் & 2022 – 458 ரன்கள்).

குறிப்பாக இந்த ஆண்டு நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றிருக்கிறார். இருப்பினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.