நான் கடினமான பாதையில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாட இவர் தான் காரணம் – ஹர்திக் பாண்டியா புகழாரம்

0
171

புதிய அணியாக உள்ளே வந்து லீக் தொடரில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் முடித்துக் கொண்டது. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் அந்த அணி அகமதாபாத்தில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை ஆசிஸ் நெஹ்ரா வெளிக்கொண்டு வருகிறார்

- Advertisement -

நானும் என் அண்ணன் க்ருனால் பாண்டியாவும் ஐபிஎல் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவதற்கு முன்பாக முன்பாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் என் அண்ணனிடம் சொன்னேன் என்னை ஒரு நபராக புரிந்துகொண்டு என்னை அறிந்து என்னிடமிருந்து சிறந்ததை பெறக்கூடிய ஒரு தலைமை பயிற்சியாளர் ஆசிஸ் நெஹரா தான். என்னிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை அவர் வெளிக்கொண்டு வருகிறார். அவருடன் இணைந்து விளையாடுவது மற்றும் அவருடன் அதிக நேரம் செலவிடுவது எப்பொழுதும் வேடிக்கையாக இருக்கும்.

கிரிக்கெட் விளையாடும் நமது எண்ணமும் இதே பாணியில் தான் செயல்படுகிறது. அவர் மக்களை கவனித்துக் கொள்வதில் அதிக நேரம் செலவிடுவார். இது ஒரு நல்ல குணம். ஒவ்வொரு நபருக்கும் போதுமான நேரத்தை அவர் வழங்குவதில் எந்தக் குறையும் வைத்ததில்லை. அணி வீரர்கள் மட்டுமின்றி சப்போர்ட் ஸ்டாஃப்கள் மற்றும் நிர்வாகத்திலுள்ள அனைவரிடமும் சந்தோசமாக பழகி அவர்களை கலகலவென வைத்திருப்பார். இவ்வாறு ஆசிஷ் நெஹ்ரா குறித்து ஹர்திக் பாண்டியா பெருமையாக பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் இதுவரை ஹர்திக் பாண்டியா 453 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 45.3 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 132.84. பந்து வீச்சில் இதுவரை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவருடைய பௌலிங் எக்கனாமி 7.74 ஆகும்.

- Advertisement -