” இவர் 24 பந்தில் 24 விக்கெட் எடுப்பார் ” அதிரடி பேச்சை முன்வைத்துள்ள பாகிஸ்தான் ஸ்பின்னர் ஷதாப் கான்

0
493
Shadab Khan

இன்றைய நவீன கிரிக்கெட் காலத்தில் டி20 கிரிக்கெட் மிகவும் பிரபலமானதாக இரசிகர்கள் மத்தியில் மாறி வருகிறது. சொல்லப்போனால் மாற்றப்பட்டு வருகிறது. இந்த வேகமான கிரிக்கெட் வடிவம், பேட்ஸ்மேன்களின் விளையாட்டாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. பேட்டிங் செய்வதற்க வசதியாகத் தட்டையான ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் பத்து விக்கெட்டுகள் இருபது ஓவர்களுக்கு அதிகமான ஒன்றாகவும் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். டி20 போட்டிகளில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் மட்டும்தான் பிரதானம்!

இந்த நிலையில் டி20 கிரிக்கெட் வடிவம் இருந்தாலும், இதிலும் சில பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பேட்ஸ்மேன்களையும், ஆட்டத்தையும் வைத்துக் கோலோச்சிதான் வருகிறார்கள். அதில் சர்வதேச அளவில் தற்போது வேகப்பந்து வீச்சில் அதிக டாட் பந்துகள் வீசி இந்தியாவின் புவனேஷ்வர் குமாரும், சுழற்பந்தில் குறைந்த எகானமி வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானும் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் டி20 வடிவத்தில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களைத் தாண்டி, ஆல்-ரவுண்டருக்கு மிகப்பெரிய தேவையும், முக்கியத்துவமும் இருக்கிறது. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா போல, பாகிஸ்தானின் சதாப் கானும் மிக முக்கியமானவர். இவர் நல்ல லெக்-ஸ்பின்னர் என்பதைத் தாண்டி பேட்டிங்கின் கீழ் வரிசையில் பிரமாதமாக அதிரடியாகவும் ஆடக்கூடியவர். இந்த ஆண்டு பிஎஸ்எல் தொடரில் பந்து வீச்சு, பேட்டிங் என மிகத் திறமையாகச் செயல்பட்டிருந்தார். 2013 ஆம் ஆண்டு பகிஸ்தானுக்காக அறிமுகமான ஷதாப் கான் இதுவரை 64 டி20 போட்டிகளில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

பாகிஸ்தானின் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு யூனிட்டையும் தன் ஆல்ரவுண்டர் பங்களிப்பால் பலப்படுத்தும் ஷதாப் கான் நல்ல பீல்டரும் கூட. இவர் தற்போது தனது பந்துவீச்சு வகைமையை வீசும், சக லெக்-ஸ்பின்னர்களான ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இலங்கையின் ஹசரங்கா பற்றிப் பேசி இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் பற்றிக் கூறிய ஷதாப் கான், அதில் “ஆப்கனின் ரஷீத் கான், இலங்கையின் வனிந்து ஹசரங்கா எனக்கு மிகவும் பிடித்த லெக்-ஸ்பின்னர்கள். இதில் ரஷீத் கான் மிகத் திறமையான லெக்-ஸ்பின்னர். அவர் தனது நான்கு ஓவர் டி20 ஸ்பெல்லீல் 24 பந்தில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய திறமையானவர். அவர் கையிலிருந்து பந்தை கணிப்பது கடினமான காரியம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க உள்ள ஆசியக் கோப்பையிலும், அதற்கடுத்து நடக்க உள்ள டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் நேருக்குநேர் மோத இருக்கின்றன. இதில் ஷதாப் கானும் இடம்பெறுவது உறுதியான ஒன்று!