தோனி அடுத்த வருஷமும் சிஎஸ்கேவில் இருப்பார்; ஆனால் அவரோட ரோல் இப்படியும் இருக்கலாம் – டிவைன் பிராவோ கொடுத்த ட்விஸ்ட்!

0
489

புதிய ரூல் ஐபிஎல் தொடரில் வந்திருக்கிறது. அதைவைத்து தோனி இன்னும் ஓரிரு ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் டிவைன் பிராவோ.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 172 ரன்கள் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை சேஸ் செய்ய விடாமல் 157 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது.

- Advertisement -

இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்கு முன்னர் குஜராத் அணிக்கு எதிராக மூன்று முறை விளையாடி அனைத்திலும் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி. முதல் முறையாக குஜராத் அணியை, அதுவும் முக்கியமான போட்டியில் வீழ்த்தியதால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு தோனியின் கேப்டன்ஷிப் மிக முக்கிய பங்காற்றியது. சரியான இடத்தில் ஃபீல்டர்களை நிற்க வைத்தது மற்றும் எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை பந்துவீச வைத்தால் விக்கெட்டுக்கள் எடுக்க முடியும் என்று திட்டமிட்டு களமிறங்கியது என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு தோனி அளித்த பேட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுதான் உங்களுக்கு கடைசி போட்டியா? இல்லை, அடுத்த வருடமும் வருவீர்களா? என்று வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி,

- Advertisement -

“மினி ஏலம் நடைபெற இன்னும் 8-9 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் இதைப்பற்றி நான் யோசிக்கவேண்டாம் என்று இருக்கிறேன்.” என்றார்.

தோனி அடுத்த சீசனில் ஆடுவாரா? என்பது குறித்து பிராவோ பேசுகையில், “கண்டிப்பாக இருப்பார்! புதிய இன்பாக்ட் ரூல் வந்திருக்கிறது. ஆகையால் தோனி பேட்டிங் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மேலும் நடுவில் சிவம் துபே, ரகானே போன்றோர் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் தோனி கீப்பிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் ஈடுபட்டால் மட்டும் போதுமானது. புதிய இன்பாக்ட் ரூல் அடிப்படையில் இன்னும் ஓரிரு ஆண்டுகள் அவர் விளையாடலாம்.” என்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.