பிட்ச் எப்படி இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆஸ்திரேலியாவை பங்கமாய் கலாய்த்த ஸ்டெய்ன்!

0
1445
Steyn

கிரிக்கெட் உலகத்தில் மிகப் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி ஏன் இருந்தது என்பதற்கான விடைகள் வந்து கொண்டே இருக்கிறது!

தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி நிர்வாகம் தயாரிக்கும் இந்திய ஆடுகளங்கள் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்கள்!

- Advertisement -

போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நாக்பூர் ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களோடு ஆஸ்திரேலியா ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலியா ஊடகங்களும் இணைந்து பெரிய மோசடி என்று களத்தில் குதித்தன.

ஆனால் அவர்கள் சொன்ன எந்த மாதிரியும் ஆடுகளம் இல்லை. பிட்ச் குறித்து இன்று பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மார்க் வாக் ஆடுகளம் விளையாடுவதற்கு மிகச் சிரமமானது கிடையாது என்று கூறியிருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியா கேப்டனும் இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு சிரமமானது இல்லை என்று கூறியிருந்தார். எல்லா வகையான குற்றச்சாட்டுகளையும் இந்திய அணியினர் முறியடித்து அபார வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆடுகளம் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வந்த ஆஸ்திரேலியர்களை கலாய்க்கும் விதமாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் படித்ததும் சிரித்து விடும்படி ட்விட் ஒன்றை போட்டுள்ளார் அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த ட்விட்டில் அவர் ” கிரிக்கெட் மக்களே உங்களிடம் விரைவான ஒரு கேள்வி கேட்கிறேன். ஒருவர் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முழங்கால் இட்டு ஆடுகளத்தில் படுத்து முகர்ந்து தெரிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஜெனரல் ஸ்டாண்டில் இருந்து ஆடுகளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா? உண்மையில் இது எல்லாம் உதவுமா?” என்று ஆஸ்திரேலியர்கள் ஆடுகளத்தை பரிசோதித்த புகைப்படத்தை பதிவிட்டு ட்விட் செய்திருக்கிறார்!