நான் சந்தித்ததிலேயே மிகக் கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் – ஹாஷிம் அம்லா

0
3002
Hasim Amla

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதன்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த போது தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் எல்கரின் சிறப்பான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த போது தென்னாப்பிரிக்காவில் ஹாஷிம் அம்லா இங்கிலாந்தின் மார்க் நிக்கலஸ் உடன் இணைந்து ஆட்டம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் உடனிருந்தார்.

அப்போது அம்லா தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தான் சந்தித்ததிலேயே சிறந்த பந்து வீச்சாளரை குறித்து பேச ஆரம்பித்தார். பலரும் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃபை தான் சந்தித்ததிலேயே கடினமான பந்துவீச்சாளர் என்று கூறினார். ஆசிஃப் ஒரு மந்திரவாதி போல அந்த இரண்டு புறமும் ஸ்விங் செய்வதில் வல்லவர் என்றும் அவரை கணித்து ஆடுவது மிகவும் கடினமான காரியம் என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகள் 37 ஒருநாள் போட்டிகள் மற்றும் பதினோரு டி20 போட்டிகளில் ஆசிஃப் விளையாடி உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு எழுந்த சூதாட்ட புகார் காரணமாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

- Advertisement -

ஆம்லா போன்ற சிறந்த பேட்டிங் வீரரிடம் இருந்து ஆசிஃபிற்க்கு இந்த புகழாரம் கிடைத்துள்ளது மிகவும் சிறப்பான விஷயம். தற்போது கேப்டவுன் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகின்றது. விராட் கோலி 79 ரன்கள் எடுத்ததன் காரணமாக இந்தியா 223 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்துதான் இந்தியா இந்த தொடரை வெல்ல போகிறதா அல்லது தோற்கப் போகிறதா என்பது தெரியவரும்.