இந்திய கிரிக்கெட்

நான் பவுலர் இல்ல ஆல் ரவுண்டர்.. இந்த ரகசிய வேலைகள் நடக்குது.. 7வது இடம் எனக்குதான் – ஹர்ஷித் ராணா பேட்டி

தற்போது இந்திய அணி நிர்வாகம் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும், தானும் அதற்காக உழைத்து வருவதாகவும் ஹர்ஷித் ராணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் வந்து முக்கியமான நேரத்தில் 23 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இவருடைய பேட்டிங் பங்களிப்பு நேற்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது.

ஹர்ஷித் ராணாவுக்கு ஏன் தொடர் வாய்ப்பு?

தற்போது இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்டு சொல்லும் படியான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இவர் வெள்ளைப்பந்து வடிவங்களில் மட்டுமே விளையாடுகிறார். அடுத்து சிவம் துபே வருகிறார். அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார். மேலும் இவர்கள் இருவருமே பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் என்பது முக்கியமானது.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திற்கும் வேகப்பந்துவீச்சு பவுலிங் ஆல்ரவுண்டர்கள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக ஆஸ்திரேலிய பேட் கம்மின்னிஸ் போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இதன் மூலம் பேட்டிங்கை வலிமைப்படுத்தலாம். மேலும் வேகப்பந்து வீச்சு யூனிட்டையும் வலிமையாக வைத்துக் கொள்ள முடியும். இந்த காரணத்தினால் தான் ஹர்ஷித் ராணாவுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அணி என்னை ஆதரிக்கிறது

இதுகுறித்து ஹர்ஷித் ராணா கூறும்பொழுது “அணி நிர்வாகம் என்னை ஒரு ஆல்ரவுண்டராக உருவாக்க நினைக்கிறது. தற்போது அதில் தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. நானும் கடுமையாக வலைப் பயிற்சியில் உழைத்து வருகிறேன். முக்கியமாக இது என்னுடைய தன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது. நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது அணி வீரர்கள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தார்கள். இது எனக்கு திட்டமிட்டு கவனமாக ரன்கள் எடுக்க உதவியது”

இதையும் படிங்க : விராட் கோலி பேட்டிங் ஸ்டைல மொத்தமா மாத்திட்டார்.. இப்ப இந்த ரூட்ல போயிட்டு இருக்காரு – இர்பான் பதான் கருத்து

“என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும் நான் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும் என அணியும் நம்புகிறது. இப்படியான ஒரு நிலை இருக்கும் பொழுது அணியின் சூழல் சிறப்பானதாக மாறுகிறது. எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி செயல்படும் பொழுது அடிச்சூழல் சிறப்பானதாகத்தான் இருக்கும். அப்படி இருந்தால் செயல்பாடும் சிறப்பானதாகவே மாறும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Harshit Rana