இந்திய கிரிக்கெட்

ஆசியன் கேம்ஸ்.. இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்.. 2 ஸ்டார் வீரர்கள் கம்பேக் – வெளியான தகவல்கள்

​அஃப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய ஸ்குவாடில் ஃபாஸ்ட் பௌலர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளார். அதே நேரத்தில் முன்னணி பௌலர் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு ஃபிட்னஸ் பெற்று இந்திய டீமிற்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

​சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில் பௌலிங் சிமுலேஷன் மேட்ச் விளையாடியபோது ஹர்ஷித் ராணாவிற்கு புதிதாக தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் தொடர்களில் இருந்து விலகியதை அடுத்து பிசிசிஐ அவருக்கு பதிலாக யாஷ் தாகூரை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது.

​தனது காயம் மற்றும் ஃபிட்னஸ் குறித்து பிசிசிஐ மருத்துவ குழுவிடம் பேசிய ஹர்ஷித் ராணா “என்னுடைய தொடை பகுதி காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. நான் மைதானத்திற்கு மீண்டும் வர மேலும் சில காலம் தேவைப்படும்” என்று கூறி இருக்கிறார்.

​இந்த தொடரில் மற்ற வீரர்களின் ஃபிட்னஸ் குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர் “ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய இரு வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு முழு ஃபிட்னஸ் உடன் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராக உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தரும் உடற்தகுதியை எட்டிவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts