2021 ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ள ஹர்ஷா போக்லே – விராட் கோலிக்கு இடமில்லை

0
683
Virat Kohli and Harsha Bhogle

ஒரு ஆண்டு முடியும்போது அந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்திய பதினோரு வீரர்களைக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு அணியை வெளியிடுவது வழக்கமான காரியம். அப்படியே கிரிக்கெட்டின் குரல் என்று வர்ணிக்கப்படும் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே தன்னுடைய 11 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பங்களித்த வீரர்களை கொண்டு இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மற்றும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அதனால் தற்போது இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட அணியை ஹர்ஷா போக்லே வெளியிட்டுள்ளார்.

துவக்க வீரர்களாக இந்த அணியில் இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கருணரத்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கானா வீரராக அறியப்பட்ட ரோஹித் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இலங்கையின் கருணரத்னே யும் அந்த அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடும் வீரர்களில் ஒருவர். மிடில் ஆடர் வீரர்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லபுஷேன், இங்கிலாந்தை சேர்ந்த ரூட் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாவத் ஆலம் ஆகியோர் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களம் இறங்கியது முதல் லபுஷேன் மிகவும் சிறப்பாக ஆடி தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல ரூட்டும் இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ஃபாவத் ஆலமும் மிடில் ஆர்டரில் அந்த அணிக்கு சிறப்பாக ஆடி வருகிறார்.

- Advertisement -

விக்கெட் கீப்பராக இந்திய அணியின் பண்ட் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இவரது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆல்ரவுண்டர் களாக இந்திய அணியின் அஸ்வின் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் ஆக நியூசிலாந்தின் ஜமிசன், பாகிஸ்தானின் அப்ரிடி மற்றும் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த நோர்கியா ஆகியோர் உள்ளனர். மூவருமே இந்த ஆண்டு சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அந்த அணிகளுக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷா போக்லே வெளியிட்டுள்ள அணி

ரோகித், கருணரத்னே, லபுஷேன், ரூட், ஆலம், பண்ட், ஹோல்டர், அஸ்வின், அப்ரிடி, ஜெமிசன், நோர்கியா.