2021 ஐபிஎல் தொடரில், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தேர்ந்தெடுத்துள்ள சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணி

0
181
Harsha Bhogle's Best Playing XI of 2021 IPL

நேற்று ஐபிஎல் தொடர் துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு முறை ( 2009,2010,2018,2021 ) கோப்பையை கைப்பற்றிய அணியாக வலம் வருகிறது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன், அந்த தொடர் முழுக்க சிறப்பாக விளையாடிய பதினோரு வீரர்களை கொண்ட அணியை கிரிக்கெட் வல்லுனர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷ போகுளே தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

ஹர்ஷ போகுளே தேர்ந்தெடுத்துள்ள அந்தப் பதினொரு சிறந்த வீரர்கள்

அவரது அணியில் ஓபனிங் வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ருத்துராஜ் இருக்கின்றனர். இவர்கள் இருவரது பெயர் எந்தவித ஆச்சரியத்தையும் படிப்பவர்களுக்கு கொடுக்காது. ஏனென்றால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ருத்துராஜ் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். சென்னை அணி இந்த ஆண்டு தொடரை வெல்ல பல போட்டிகளில் ருத்துராஜ் உதவினார். மறுபக்கம் கேஎல் ராகுல் 13 போட்டிகளிலேயே 626 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆவெரேஜ் 62.60 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரை தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மையர் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடிய ஒரே வீரர் சஞ்சு சாம்சன் மட்டுமே. இந்தத் தொடரில் அவர் 484 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல பெங்களூர் அணி சார்பாக கிளன் மேக்ஸ்வெல் அதிக ரன்களை (513 ரன்கள்) குவித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ஸ்ட்ரைக் ரேட் விஷயத்தில் நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் மிக அதிரடியாக விளையாடிய வீரர் ஹெட்மையர் என்பது குறிப்பிடதக்கது.

ஆல்ரவுண்டர் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர் மற்றும் சுனில் நரைன் உள்ளனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் மட்டுமின்றி அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங்,ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தி காட்டினார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் இறுதி நேரத்தில் மிக அற்புதமாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தனது அதிரடியை காட்டினார்
கொல்கத்தா அணியை சேர்ந்த சுனில் நரைன் பந்துவீச்சில் பல போட்டிகளில் எதிரணியை திணறடித்தார். அதுமட்டுமின்றி அவ்வப்போது வந்து பேட்டிங்கிலும் மிக அதிரடியாக அவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இறுதியாக ஹர்ஷ போகுளே தெரிந்தெடுத்த அணியின் பந்துவீச்சாளர்கள் ஆக ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் மற்றும் வருன் சக்ரவர்த்தி உள்ளனர். பெங்களூரு அணியில் விளையாடிய ஹர்ஷால் பட்டேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் தொப்பியை கைப்பற்றினார். அதேபோல ஜஸ்பிரித் பும்ரா 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், வருன் சக்ரவர்த்தி 17 போட்டிகள் 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ போகுளே தேர்ந்தெடுத்துள்ள 11 சிறந்த வீரர்களை கொண்ட அணி

கேஎல் ராகுல், ருத்துராஜ், சஞ்சு சாம்சன், கிளன் மேக்ஸ்வெல், சிம்ரோன் ஹெட்மையர், ரவீந்திர ஜடேஜா, ஜேசன் ஹோல்டர், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் மற்றும் வருன் சக்ரவர்த்தி