ஹர்திக் பாண்டியா படை சிறப்பான பந்து வீச்சு!

0
1704
Hardikpandya

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . மழையால் தாமதமாக துவங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது .

துவக்க வீரராக காலம் இறங்கிய டேவன் கான்வே மற்றும் ஆலன் இருவரும் சற்று தடுமாற்றத்துடன் துவங்கினர் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அர்ஷிதீப் சிங்அதனை தொடர்ந்து வந்த சாப்மேன் சிராஜ் வேகத்தில் ஆட்டம் இழக்க ஆரம்பத்திலேயே சிறிய தடுமாற்றம் கண்டது .

- Advertisement -

அதன் பின் நியூஸிலாந்தின் அதிரடி ஸ்டார் ஜோடியான பிலிப்ஸ் மற்றும் கான்வே இருவரும் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர் வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார் இவரை தொடர்ந்து நிலைத்து ஆடிய காண்வே தன்னுடைய அரை சதத்தை கடந்தார் .

15 ஓவரின் முடிவில் இரண்டு விக்கெட் இழந்து மிகப்பெரிய இலக்கை எட்டும் முயற்சியில் இருந்த நியூஸிலாந்து அணியை சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் இருவரும் தண்டாளுடைய அருமையான டெத் பௌலிங்கின் மூலம் கட்டுப்படுத்தினர் .

ஆட்டத்தின் 16 வது ஓவர் இந்தியா அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது அந்த ஓவரில் சிராஜ் வெறும் ஆறு ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் .அதனை தொடர்ந்து வது ஓவரை வீசிய அர்ஷிதீப் அந்த ஓவரில் கான்வே விக்கெட்டை கைப்பற்றி மேலும் நியூஸிலாந்து அணியை கட்டுப்படுத்த உதவினார் .

- Advertisement -

அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் சிராஜ் மற்றும் அர்ஷிதீப் இருவரும் ஒரு ஒவேரில் இரண்டு மற்றும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டினர்.இதனை தொடர்ந்து நியூஸிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

இந்திய அணியின் சார்பில் அர்ஷிதீப் சிங் மற்றும் முஹம்மது சிராஜ் தலா நான்கு விக்கெட்டுகளையும் ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.நியூஸிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 54 ரன்களையும் டெவோன் கான்வே53 ரன்களையும் பெற்றனர் .

சுருக்கமான ஸ்கோர் விவரம் :
நியூஸிலாந்து :160/10 (19.4. ஓவர்கள் )
டேவன் கான்வே 59 (49) 5×4. 2×6
க்ளென் பிலிப்ஸ் 54(33) 5×4 3×6

இந்திய பந்துவீச்சு :
அர்ஷிதீப் சிங் 4-0-37-4
முஹம்மது சிராஜ் 4-0-17-4