ஹர்திக் பாண்டியா படைத்த பிரம்மாண்ட சாதனை.. அடுத்த சவாலுக்கும் ரெடி!

0
736

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன்  ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என சிறப்பாக செயல்பட்டார். எனினும் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவில்லை. எனினும் போட்டியை மாற்றியவர் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 50 வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து
பேசிய ஹர்திக் பாண்டியா, தமது பந்துவீச்சில் சில மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

பந்து புதியதாக இருக்கும் போது, அதில்  வீச வாய்ப்பு கிடைக்கும் போது தாம்  மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, தமக்கு  தனிப்பட்ட முறையில் இது நல்ல நாளாக அமைந்தது என்று குறிப்பிட்டார். பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யும் முறையை சமீபத்தில் தொடங்கியதாக தெரிவித்த ஹர்திக் பாண்டியா, இந்த ஆட்டத்தில் அதனை செய்ய முடிந்தது மனசுக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாக குறிப்பிட்டார். இதன் மூலம் தமது இன் ஸ்விங் பந்து நல்ல முன்னேற்றம் அடைந்ததாக பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்தார்.

- Advertisement -

  தாம் காயத்திலிருந்து மீண்டும் வந்த போது,  பந்தை எப்படி வீச வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியதாகவும், இதனால் தாம் பந்தின் seam- ஐ சிறப்பாக  பயன்படுத்தியதாகவும் ஹர்திக் கூறினார்.  தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 9 போட்டியில் விளையாடி  இருக்கிறார். தற்போது 2 நாள் இடைவெளியில் மீண்டும்  டி20 தொடரில் கேப்டனாக விளையாட உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,  தற்போது மனதளவில் உடல் அளவில் சிறப்பாகவே உணர்வதாகவும், தமது பணிச்சுமையை மனதில் வைத்து திட்டமிட்டு தான் தம்மை  அணி நிர்வாகம் பயன்படுத்துவதாக ஹர்திக் பாண்டியா கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஹர்திக், அதில் கேப்டனாக செயல்படுவது எதிர்நோக்கி காத்திருப்பதாக ஹர்திக் கூறினார். நியூசிலாந்து அதிரடி வீரர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சிரம்மாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஹர்திக், அதனை தமது வீரர்கள் சிறப்பாக கையாள்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.