எல்லா போட்டியிலும் ஹார்திக் பாண்டியாவை பந்துவீச சொல்லி கஷ்டம் அளிக்க கூடாது ; காரணம் இதுதான் – ஆஷிஷ் நெஹ்ரா

0
88
Ashish Nehra about Hardik Pandya bowling

ஹர்திக் பாண்ட்யா எனும் பெயர் அவர் மும்பை அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஜொலித்த போதிலிருந்து இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகவே இருந்து வருகிறது. காரணம் பல ஆண்டுகளாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டருக்கான பஞ்சம்தான்!

ஒரு அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருப்பது, கூடுதலா ஒரு பேட்ஸ்மேனை ஆடும் லெவனில் கொண்டுவரவும், இல்லையென்றால் ஆடுகளத்திற்குத் தகுந்தாற்போல் ஒரு கூடுதல் பந்துவீச்சாளரோடு களமிறங்கவும் பெரிய உதவியாய் இருக்கும். ஆனால் கபில்தேவிற்குப் பிறகு, ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பது கனவாகவே இருந்து வந்தது!

- Advertisement -

இந்த நிலையில் பரோடா அணியிலிருந்து ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காகத் தேர்வாகி, ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக சிறப்பாகச் செயல்பட, இந்திய அணியிலும் வாய்ப்பைப் பெற்றார். சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கி, இங்கிலாந்து மண்ணிலும் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

2020வாக்கில் முதுகு காயத்தால் அவதிப்பட்ட இவர், இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள செயல்திறன் பாதித்தது. இதனால் இவராகவே அணியிலிருந்து விலகியிருந்து உடற்தகுதியை மேம்படுத்தி, 2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்கி கோப்பையை வென்றும் அசத்தினார். பேட்ஸ்மேனாக 16 ஆட்டங்களில் 487 ரன்களையும், பவுலராக 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு, இறுதி ஆட்டத்தில் முக்கியமான 34 ரன்களை அடித்து, பந்து வீச்சில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா அவரைப் பற்றி சில கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில் அவர் “இந்திய அணியின் முன்வரிசை வீரர்களிர் யாரும் பந்து வீசக்கூடிய அளவில் இல்லாததால், எப்போதும் ஹர்திக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதனால் சில நேரங்களில் ஹர்திக் ஐந்தாவது பவுலராக இருப்பதைக் காணலாம். அதனால் அவருக்குப் பந்துவீச்சில் அழுத்தம் உண்டு. அவர் பிட்டாக இருந்தால் பந்துவீச விரும்புவார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் நான்கு ஓவர் வீசவேண்டுமென்ற அழுத்தத்தை தரக்கூடாது. இதற்கு ஐந்து ஸ்பெசலிஷ்ட் பவுலர்கள் அணியில் இருக்க வேண்டும்” என்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஹர்திக்கால் ஐந்தாவது பந்வீச்சாளராக இருக்க முடியாது என்று நான் கூறவில்லை. அவரால் இரண்டாவது மூன்றாவது பவுலராகவும் இருக்க முடியும். ஆனால் ஒரு ஆல்ரவுண்டரான அவர் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மெதுவாகத்தான் பில்டப் செய்ய வேண்டும். இதற்கு இந்திய அணியின் ஆர்டரை சரியாக அமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்!