“ரோகித் கோலிக்கு ஹர்திக் பாண்டியா மரியாதை தந்தே ஆகவேண்டும்..!” – அக்தர் அதிரடியான பேச்சு!

0
580
Akthar

இந்திய கிரிக்கெட்டில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன்கள் என நிறைய மாறுதல்கள் ஏற்பட இருக்கின்ற காலமாக இது இருக்கிறது.

ரோகித் சர்மா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இரண்டு வடிவத்திலும் விளையாட விருப்பமில்லை என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கும் இந்திய அணிக்கு புதிய கேப்டனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருந்து வருகிறது. ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை மனதில் வைத்து அவரை ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக கொண்டுவர பிசிசிஐ யோசிக்கிறது.

எப்படி இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா சீக்கிரத்தில் விடை பெறுவது உறுதியாக இருக்கிறது. மேலும் இளம் வீரர்கள் கொண்ட டி20 அணியை கட்டமைக்க வேண்டிய தேவையும் இன்னொரு புறத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்றால், அவருக்கு என்ன மாதிரியான பொறுப்புகள் இருக்கிறது என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் அக்தர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அக்தர் கூறும் பொழுது “தோனி கேப்டனாக வந்ததும் சச்சினுக்கு மரியாதை கொடுத்தார். விராட் கோலி வந்ததும் தோனிக்கு மரியாதை கொடுத்தார். இதே மாதிரி ரோகித் சர்மா வந்ததும் விராட் கோலிக்கு மரியாதை கொடுத்தார். எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை எப்படி மரியாதையாக வழி அனுப்புவது என்பது ஹர்திக் பாண்டியா கையில் இருக்கிறது.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த மரியாதைக்கு மிகவும் தகுதியானவர்கள். இதன் மூலம் ஹர்திக் பாண்டியாவுக்கு அழுத்தம் ஏற்படலாம்.ஆனால் அந்த மரியாதையை இருவருக்கும் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

ஏனென்றால் இந்த இருவரால் அவர் அணியில் இருந்தார். அவர்களிடமிருந்து பெற்ற உதவியை திருப்பித் தர வேண்டிய நேரம் இது. மேலும் இந்த இருவரும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள். எனவே அவர்களை விடுவிக்கும் முன்னால் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டியது கடமை!” என்று கூறி இருக்கிறார்!