கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல்.. மிகவும் வருத்தமாக இருப்பதாக கருத்து

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீண்ட காலம் களத்துக்கு வெளியே இருக்க உள்ளார்.  மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 கட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்தார்.

- Advertisement -

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை தவறவிட்டார்.இந்த காயம் ஆரம்பத்தில் துபாயில் நடந்த சூப்பர் ஓவர் வெற்றிக்கு பிறகு தசை பிடிப்பு என கருதப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததற்கு சிறு காயம்  என்று காரணம் கூறியிருந்தார்.

ஹர்திக் சந்தேகம்:

இருப்பினும், இந்த காயம் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் சிரியாசனது என தெரியவந்துள்ளது. இதற்கு நான்கு வார ஓய்வு தேவைப்படும்.இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் அக்டோபர் 19 முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் தொடங்க உள்ளது.அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக உள்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் நடைபெறுகிறது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் அக்டோபர் 19 முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுடன் தொடங்க உள்ளது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக உள்நாட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.இந்திய அணி அக்டோபர் 29 முதல் ஆஸ்திரேலியாவில் ஐந்து டி20 போட்டிகளையும் ஆட உள்ளது. இதன்படி, பாண்டியா குணமடைந்தால் சில டி20 போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

வருத்தமாக உள்ளது:

பிசிசிஐ மருத்துவ அறிக்கையை எதிர்பார்த்து, தொடருக்கான அணியை தேர்வு செய்ய உள்ளது.பிசிசிஐ வட்டாரங்களின்படி, பாண்டியாவுக்கு நான்கு வார ஓய்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அறிக்கை கூறுகிறது. ஆசிய கோப்பை 2025 பயணத்தில் இவர் முக்கிய பங்காற்றினார், ஜஸ்ப்ரித் பும்ராவுடன் முன்னணி பந்துவீச்சாளராகவும விளங்கினார்.  4 விக்கெட்டுகளையும், 120 ஸ்ட்ரைக் ரேட்டில் 48 ரன்களையும் எடுத்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர்கள் என்னை சீண்டினார்கள்..  ஆனால், எங்களுக்கு சமமான அணியே அவங்க கிடையாது.. திலக் வர்மா மாஸ் பேச்சு

“ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியை தவறவிட்டது குறித்து பேசிய ஹர்திக் “மிக முக்கியமான ஆட்டத்தை தவறவிட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் பையன்கள் ஆடிய விதம் அற்புதமாக இருந்தது. எனக்கு வழங்கப்பட்ட எந்தப் பாத்திரத்தையும் நான் எப்போதும் ரசித்திருக்கிறேன்.
இந்த முறை எனக்கு புதிய பந்து வழங்கப்பட்டது. அதை நான் மிகவும் ரசித்தேன். அணிக்கு தேவைப்படும்போது எப்போதும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்,அதுதான் எனது பேட்டிங் பாணி,” என்று பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் கூறினார்.

- Advertisement -
Published by