பிளேயிங் லெவனில் சரியான முடிவு எடுத்தாரா ஹர்திக்.. சஞ்சுக்கு ஏன் வாய்ப்பு இல்லை?

0
428

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுகின்றனர் . இதனால் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதேபோன்று சஞ்சு சம்சனுக்கு இடம் தரப்படவில்லை. அதற்கு பதில் தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதேபோன்று பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் , நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவும் இடம்பெற்றுள்ளனர். ஐந்தாவது இடத்தில் ஆல் ரவுண்டர் தீபக் ஹூடாவும், ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சுழற் பந்துவீச்சாளராக சாஹல் இடம் பெற்றுள்ளார். இதேபோன்று வேக பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார், சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பல வீரர்களை பயன்படுத்த ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சில் சாகல், வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா என மூன்று வீரர்களும் பந்து வீசுவார்கள்.

இதேபோன்று ஹர்திக் பாண்டியாவையும் சேர்த்து நான்கு வேக பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் மொத்தம் ஏழு வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏதேனும் ஒரு வீரர் சரிவர பந்து வீசவில்லை என்றால் அவருக்கு ஓவரை குறைத்து விட்டு மற்றொருவரை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சை பொருத்தவரைக்கும் புவனேஸ்வர் குமாருக்கு வயதாகிவிட்டது. இனியும் அவரை பயன்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்கு பதில் உம்ரான் மாலிக் போன்ற வேக பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

- Advertisement -

இதே போன்று சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர்களுக்கு இன்னும் பெஞ்சில் அமர வைக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரில் ஸ்ரேயாஸ் நன்றாக விளையாடியதால் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். தற்போது முதலில் பேட் செய்யும் இந்திய அணி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதால் 200 ரண்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே ஓரளவு போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும்.