2 சிக்ஸ் அடிச்சாதான் ஜெயிக்க முடியும்.. அப்ப கூட எனக்கு இதை நினைச்சு சிரிப்புதான் வந்தது – ஹர்திக் பாண்டியா சுவாரஸ்யம்

0
846

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த சூழ்நிலையில் தான் ஆடுகளத்தில் இருந்த போது இந்த விஷயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்ததாக ஹர்திக் பாண்டியா சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அரை இறுதி

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. எனவே அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த சாம்பியன் டிராபி அரை இறுதி போட்டி பார்க்கப்பட்டு முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அந்தப் போட்டியில் 264 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய போது ஆட்டம் இந்திய அணியின் பக்கம் இருந்தாலும் இறுதிக் கட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

இருப்பினும் இறுதியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 24 பந்துகளை எதிர் கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து நொறுக்கி இந்திய அணியை வெற்றி பாதைக்கு தள்ளினார். இந்த சூழ்நிலையில் தான் களத்தில் இருக்கும் போது சிக்சர் அடிக்க வேண்டும் என்று நினைத்ததை விட இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் இப்போது நிச்சயம் பதட்டத்தில் இருக்கும் என்று தான் அதை உணர்ந்து சிரித்ததாக சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

எனக்கு சிரிப்புதான் வந்தது

இது குறித்து அவர் கூறும் போது “நான் அந்த சமயத்தில் சிரித்துக் கொண்டிருந்தேன். இரண்டு சிக்ஸர்கள் அடிப்பது குறித்து நான் நினைக்கவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் மக்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதனை நினைத்து தான் நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்” என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:பாவம்யா அந்த மனுஷன்.. உதிரி டயரை விட மோசமா யூஸ் பண்ணுறீங்க – இந்திய முன்னாள் வீரர் வருத்தம்

அதாவது ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னை எப்போதுமே அமைதியாக வைத்துக் கொள்ளக் கூடியவர். இதற்கு முன்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசனை ஆர்ப்பாட்டமே இல்லாமல் வெளியேற்றினார். அதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல எந்த ஒரு சூழ்நிலையில் களமிறங்கினாலும் தன்னுடைய ஆட்டத்தை இயல்பாக வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவராகவே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -