இப்பவும் தோனி வழிதான்.. நான் அதை நம்புவதே கிடையாது.. நினைத்ததுதான் நடக்குது – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
270
Hardik

நேற்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக முன்னேறி இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதுடன் கோப்பையையும் வென்றுவிடும் என ரசிகர்கள் தற்பொழுது பேசி வருகிறார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் முக்கியத்துவம்

மும்பை இந்தியன்ஸ் அணி பேப்பரில் மிகவும் வலிமையான அணியாக இருந்த பொழுதிலும் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அழுத்தத்தில் இருந்ததுதான். அவர்களுக்கு அழுத்தம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.

இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களின் மோசமான செயல்பாடு மொத்த பேட்டிங் யூனிட்டையும் பாதித்தது. ஆனால் தற்போது ரோகித் சர்மா அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து இருப்பது அந்த அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. துவக்க இடத்தில் இருந்து ரன் வரும் பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது சாதாரண விஷயமாக தெரியவில்லை. தற்போது ரோகித் சர்மாவின் முக்கியத்துவம் திடீரென அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் தோனியை போலவே கேப்டன் பொறுப்பில் ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருவதாக அவர் கூறியதில் தெரியவருகிறது.

- Advertisement -

நான் அதை நம்புவதில்லை

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “எங்களுக்கு வெளியில் ஒரு வெற்றி கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். வீரர்கள் வேகத்தை சரியான வழியில் எடுத்துச் செல்வது மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் அணியில் ரோகித், தீபக், போல்ட் மற்றும் சூர்யா நால்வரும் கிளிக் செய்ய ஆரம்பித்து விட்டால் நாங்கள் அற்புதமான இடத்தில் இருப்போம் என்று தெரியும்”

இதையும் படிங்க : CSK vs SRH.. ஆர்சிபி வழியில் சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI.. தோனி மொத்தமா மாத்தணும்.. கடைசி இடத்தில் மீளனும்

“கேப்டன்சி என்பது உள்ளுணர்வு சம்பந்தப்பட்டது. நான் ஆட்டத்தின் சூழ்நிலைகளை பார்த்து அந்தந்த நேரத்திற்கான முடிவுகளை எடுக்கிறேன். நான் முன்கூட்டியே முடிவுகள் எடுப்பதை நம்புவது கிடையாது. நல்ல கிரிக்கெட் புத்திசாலித்தனமாக விளையாடுவது பற்றி விவாதித்தோம். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்து வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து இதே வழியில் பயணிப்போம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -