வெறும் மேகி மட்டும் தான் உணவு.. ஹர்திக், குர்னலை தேர்வு செய்தது எப்படி? நீதா அம்பானி கருத்து

0
255

ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பையை முதல் முறையாக வென்ற அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது திறமை வாய்ந்த இளம் வீரர்களும், சர்வதேச வீரர்களும் இணைந்து பட்டையை கிளப்பியதுதான்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமாக இருந்தது ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர்தான். இதில் ஹர்திக் பாண்டியாவும், குர்னல் பாண்டியாவும் சகோதரர்கள் ஆவார்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வந்த பிறகு தான் இருவரின் வாழ்க்கையும் முற்றிலும் மாறியது.

- Advertisement -

வெறும் மேகி மட்டும் தான் உணவு:

இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவும், குர்னல் பாண்டியாவும் எவ்வாறு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறித்து அந்த அணியில் உரிமையாளர் நீதா அம்பானி தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் இவ்வளவுதான் பட்ஜெட் என்று ஏற்கனவே நியமித்து விட்டார்கள்”.

“எனவே எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் சில வீரர்களுக்கு செலவழிக்க முடியும். எனவே நாங்கள் இளம் வீரர்களை அதிக அளவு தேர்வு செய்ய முயற்சி செய்தோம். இதற்காக நான் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் பார்வையாளராக கலந்து கொண்டு திறமையான வீரர்கள் குறித்து கண்காணிப்பேன். அப்போதுதான் எங்கள் அணி நிர்வாகிகள் இரண்டு இனம் வீரர்களை எங்களுடைய பயிற்சி முகாமுக்கு அழைத்து வந்தார்கள்”.

- Advertisement -

பும்ராவையும் கண்டுபிடித்தோம்:

“அப்போது நான் அவர்களிடம் பேசினேன். அப்போதுதான் எனக்கு தெரிந்தது, மூன்று ஆண்டுகளாக வெறும் மேகியை மட்டுமே சாப்பிட்டு அந்த சிறுவர்கள் வளர்ந்து வந்தார்கள் என்று.. ஏனென்றால் அவர்களிடம் பணம் கிடையாது. எனினும் அந்த இரண்டு பேரிடமே கிரிக்கெட்டில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது”.

“இதனை அடுத்து அந்த இரண்டு வீரர்களையும் நாங்கள் எங்கள் அணிக்குள் தேர்வு செய்தோம். அவர்கள்தான் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு தான் நாங்கள் எடுத்தோம். தற்போது மும்பை அணியின் கேப்டனாக அவர் இருக்கின்றார்”.

“இதேபோன்று அடுத்த ஆண்டு ஒரு இளம் வீரர் வித்தியாசமாக பந்து வீசுவதை நாங்கள் கண்டோம். பந்துடன் பேசி அவர் விளையாடியது நாங்கள் கண்டோம். அவர்தான் பும்ரா. அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு. இதே போல் தான் நாங்கள் திலக் வர்மாவை தேர்வு செய்தோம். தற்போது அவர் இந்திய அணியில் இருக்கின்றார். எனவே இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரர்களை வளர்த்து வரும் பள்ளிக்கூடமாக எங்கள் அணி இருக்கிறது” என்று நீதா அம்பாணி கூறியுள்ளார்.

- Advertisement -