ஆசிய கோப்பை கான இந்தியா அணியின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இந்திய ஒரு நாள் அணியில் இடம்பெறாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார் . இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்தியாவிற்கு ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று ஒரு கருத்து நிலவி வந்தது.
ஆனால் ஆசிய கோப்பை அணியிலும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார் . இதற்கு சாதகமான மற்றும் பாதகமான கருத்துக்கள் கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் விமர்சிகர்களிடையையும் பரவி வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்த இளம் வீரர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரஹ்மத்துல்லா குர்பாஸ் இவர் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள குர்பாஸ் இந்திய இளம் பிறர்தான் ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேட்டி அளித்திருக்கும் அவர் ” கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். உலக கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகவும் பிரபலமானது மற்றும் புகழ்வாய்ந்தது ஐபிஎல் கிரிக்கெட். அதில் இருக்கும் ஒரு அணியை வழிநடத்தும் ஸ்ரேயாஸ் ஐயரால் நிச்சயமாக இந்திய அணியையும் வழிநடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசி இருக்கும் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் ” ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு மட்டுமில்லாத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அவர் ஒரு சிறந்த வீரர் . இதற்கு முன்பு கொல்கத்தா அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். எனவே ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த ஸ்ரேயாஸ் ஐயர் தகுதியான நபராக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.
அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் ஸ்ரேயாஸ் ஐயரை போன்ற ஒரு டைனமிக் வீரரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் பயிற்சியாளர்கள் என்னை விட மிகுந்த அனுபவசாலிகள் அவர்கள் சிறப்பான வீரர்களை தேர்வு செய்வார்கள் இந்தியாவிலும் ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயமாக உலகக் கோப்பை காண இந்திய அணியிலும் இடம் பெறுவார் என்று தெரிவித்தார் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ்.