ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹெட் பேட்டிங் செய்ய வந்த பொழுது மீண்டும் ரோகித் சர்மா தவறு செய்து விட்டதாக ஹர்பஜன்சிங் மற்றும் மேத்யூ ஹைடன் இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 141 பந்தில் 14 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி 18 பவுண்டரிகள் உடன் 160 பந்தில் 152 ரன்கள் குறித்து இந்திய அணிக்கு மீண்டும் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அணிக்கு திரும்பிய கேப்டன் ரோஹித் சர்மா, அந்தப் போட்டியில் ஹெட்டுக்கு அவருடைய பலவீனமான ஷார்ட் பந்துகளை ஆரம்பத்தில் இருந்து பந்து வீச்சாளர்களை வீச வைக்காதது பெரிய விமர்சனமாக இந்திய தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. இதே தவறை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா செய்திருந்தார்.
எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஹெட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தொடர்ந்து இந்திய கேப்டனுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். ஆனால் இந்த முறையும் கேப்டன் ரோஹித் சர்மா ஹெட்டுக்கு எதிராக ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டார் என்று தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “ஹெட் உள்ளே வந்த பொழுதே இந்திய சிறப்பாக செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி அவரை அதிகம் தாக்கவில்லை. அவர் உள்ளே நுழைந்ததும் பும்ராவை உடனடியாக கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஜடேஜாவை எதிர்கொண்டார்.பும்ரா ஆரம்பத்திலேயே இரண்டு மூன்று நபர்கள் பந்துவீசி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சிராஜ் ஹெட்டுக்கு செய்தது ஊமை கிரிக்கெட்.. இவ்வளவு மோசமாவா செய்வீங்க? – சைமன் கேடிச் விமர்சனம்
இது குறித்து பேசிய ஹைடன் கூறும் பொழுது “ஹெட்டுக்கு எதிரான தொந்தரத்தை ஆரம்பத்திலேயே இந்திய அணி தவற விட்டதாக நான் உணர்கிறேன். விராட் கோலிக்கு முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா செய்த அதே தவறை தற்போது ஹெட்டுக்கு இந்தியா செய்திருக்கிறது. சிறந்த பேட்ஸ்மேன் கலை முதல் 20 ரன்கள் எடுத்து நல்ல மண்டலத்திற்குள் செல்ல அனுமதிக்க கூடாது. ஆனால் இன்று ஹெட்டுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அப்படியான அனுமதியைத்தான் கொடுத்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.