இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீப காலமாக தங்களது பேட்டிங்கில் தொடர்ந்து சரிவை கண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களது பேட்டிங் ஃபார்ம் முன்னேறுவதற்கு சில முக்கிய குறிப்புகளை கூறியிருக்கிறார்.
விராட் கோலி ரோஹித் சர்மா மோசமான ஃபார்ம்
இந்திய அணி கடைசியாக டி20 உலக கோப்பையை 2024ம் ஆண்டுக்குப் பிறகு வென்றபோது அதில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நாக் அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோகித் சர்மா நாக் அவுட் மற்றும் அரை இறுதியில் சிறப்பாக விளையாடியும், விராட் கோலி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு சரிவை கண்ட அவர்களது பேட்டிங் ஃபார்ம் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை மீளவே இல்லை. மேலும் இவர்களது பேட்டிங் ஃபார்ம் குறித்து மக்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களது விமர்சனங்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இவர்கள் மீதான விமர்சனங்கள் அடங்க வருகிற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
விமர்சனங்கள் அடங்க இதுதான் ஒரே வழி
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” ரோகித் சர்மா இந்த தலைமுறையின் மிகச் சிறப்பான கிரிக்கெட் வீரர் . மேலும் விராத் கோலியும் இந்த தலைமுறையின் சிறந்த வீரர். ஆனால் அவர்களது எதிர்காலத்தையோ பார்மையோ தேர்வாளர்கள் தீர்மானிப்பதில்லை. நீங்கள் ரன்கள் எடுக்காத போது மக்கள் உங்களை விமர்சனம் செய்வார்கள். அதே நேரத்தில் நீங்கள் சிறப்பாக விளையாடத் தொடங்கினால் அனைத்தும் அமைதியாகும். எனவே இவர்கள் மீதான விமர்சனம் அடங்க நான் பார்க்கிற ஒரே வழி இதுதான்.
இதையும் படிங்க:ஓய்வை அறிவித்தாலும்.. அஸ்வின் இந்த விஷயத்துல தெளிவா இருக்காரு.. ஆனா பல பேர் பத்தி எதுவுமே தெரியாது – மைக்கேல் வாகன்
இவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாட விரும்பினால் இந்திய அணிக்காக பெரிய அளவில் ரன்கள் எடுக்க வேண்டும். விளையாட தகுதி எவ்வளவு இருக்கிறது என்று வீரர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறி இருக்கிறார். மேலும் பாகிஸ்தானில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இவர்கள் இருவரும் அதில் சிறப்பாக விளையாடி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.






