சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று இன்று மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் நிலை குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்தியா கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பதிவு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் இருநாட்டு அணிகளிடையே மட்டுமின்றி இருநாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரிடமும் உற்சாகம் மற்றும் பரபரப்பு என அனைத்தும் தொற்றிக் கொள்ளும்.
ஆனால் சமீபத்தில் சில ஆண்டுகளாகவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒரு தலைப்பட்சமாகவே இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாத வகையில் அவர்களின் செயல்பாடு மோசமாக இருந்துள்ளது. கடந்த ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் மோசமாக தோல்வி அடைந்த பாகிஸ்தான் அதற்குப் பிறகு தற்போது நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் போராட்டமே இல்லாமல் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வென்றது. இந்த சூழ்நிலையில் இது குறித்து ஹர்பஜன்சிங் சில கருத்துக்களை பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மிகைப்படுத்தப்பட்டது என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டி காரணமாக இந்த ஆட்டம் பெரிதாக காட்டப்பட்டது. ஆனால் போட்டியை பொறுத்தவரை அந்த ஆட்டம் இப்போது எங்கும் இருக்கவில்லை. இந்தியா தற்போது மிகவும் பலமான அணி. மறுபடியும் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை எதிர்த்து நிற்க எந்த பலமும் இல்லை என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க:இங்கிலாந்து கிரிக்கெட்ல ஒரே நல்ல விஷயம் அவர் மட்டும்தான்.. அவர மாதிரி விளையாடுங்க – முகமது கைஃப் அறிவுரை
அவர்கள் 10 முறை போட்டியிட்டால் இந்திய அணி அதில் 8 அல்லது 9 முறை வெற்றி பெறும். இல்லையெனில் 10 முறையும் இந்திய அணியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என்று ஹர்பஜன் சிங் வெளிப்படையாக பாகிஸ்தான் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இந்த தொடரை பொருத்தவரை பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.