ஐபிஎல் 2025

தெளிவா சொல்றேன்.. அவரை இனி டீம்ல எடுக்காதீங்க.. ஓவரா அசைச்சா எப்படி ஓடுவாரு – ஹர்பஜன் சிங் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மூன்றாவது லீக் ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணி சேர்க்கை குறித்து முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சென்னை அணியின் தொடர் தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை வலுவான அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. பந்து வீச்சு சென்னை அணிக்கு வலுவாக இருந்த போதிலும் பேட்டிங் வரிசை பலவீனமான நிலையில் இருக்கிறது. 2023 சீசனில் சென்னை அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த டெவான் கான்வே விளையாடுவதற்கு பதிலாக கடந்த ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற ராகுல் திருப்பாதி சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

இதுவரை மூன்று ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ள நிலையில் ஒரு சிறந்த தொடக்கத்தை கூட அவர் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கடந்த மூன்று போட்டிகளில் முறையே அவர் 2, 5, 23 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார். இந்த சூழ்நிலையில் அடுத்த போட்டியில் அவரை சிஎஸ்கே கட்டாயம் பிளேயிங் லெவனில் சேர்க்கக்கூடாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரை இனி சேர்க்காதீங்க

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ராகுல் திருப்பாதி தனது உடலை அதிகமாக ஆட்டுகிறார். அதனால் அவரால் சிங்கிள் எடுத்து அதிகமாக ஓட முடியவில்லை. அவர் சிறந்த வீரர் மற்றும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு வீரர் தான், ஆனால் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்கக்கூடாது என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். அதிக அளவில் உடலை அசைத்தால் பந்தை எப்படி பார்ப்பீர்கள், மேலும் அவருடைய நோக்கமும் என்னவென்று சரியாக தெரியவில்லை” என்று ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:4 விக்கெட்.. அறிமுகப் போட்டியில் அபாரம்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் பவுலர்.. மும்பை பட்டறையில் வெளிவந்த இன்னொரு திறமை

எனவே அடுத்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக டெவான் கான்வெ தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடக்க வரிசையில் விளையாடி வரும் ரச்சின் ரவிந்த்ரா மூன்றாவது வரிசையிலும், மூன்றாவது வரிசையில் விளையாடக்கூடிய கேப்டன் ருத்ராஜ் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தோல்விகளை பெற்றிருக்கும் சென்னை அணி திரும்பவும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -
Published by