இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நன்றாக விளையாடும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பேட்டிங் மிகவும் மோசமான முறையில் இருந்தது. கடைசி டெஸ்டில் ரிஷப் பண்ட் ஓரளவுக்கு மீண்டு வந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய கேஎல்.ராகுல் அதற்கு மேல் நன்றாக விளையாடவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் வரையில் இந்திய அணி மிகவும் சிறப்பான முறையில் இருந்து வந்ததாகவும், ஒரு உலகக் கோப்பை தொடரை வென்றதாகவும், ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் இந்திய அணிக்கு என்ன ஆகிவிட்டது? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் அவர் இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழித்து கட்ட வேண்டும் என்றும், நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மட்டுமே அடுத்தடுத்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். அவர் மறைமுகமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” கடைசி ஆறு மாதத்தில் நாம் இலங்கை அணி இடம் தோற்றோம் அடுத்து சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் ஒயிட் வாஸ் ஆகினோம். இதைத்தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்திருக்கிறோம். ராகுல் டிராவிட் இருக்கும் வரையில் இந்திய அணி சிறப்பாக சென்றது, உலகக் கோப்பையையும் வென்றது. ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் இந்திய அணிக்கு என்ன ஆனது?”
இதையும் படிங்க : இந்திய அணிக்கு கில் செஞ்சது என்ன?.. இதே தமிழ்நாடு பிளேயரா இருந்தா நீக்கி இருப்பீங்க – பத்ரிநாத் கோபம்
“இங்கு ஒவ்வொரு வீரர்களுக்கும் நல்ல பெயர் இருக்கிறது. அப்படி பார்த்த தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் கபில்தேவ் மற்றும் கும்ப்ளே ஆகியோரை மீண்டும் தேர்வு செய்ய முடியுமா? சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை விட்டு விட வேண்டும். நல்ல முறையில் விளையாடக் கூடியவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அடுத்து இங்கிலாந்து தொடருக்கு பெரிய வீரர்கள் என்ற அடிப்படையில் யாரையும் தேர்வு செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.