ஹனுமா விகாரிக்கு சலியூட்! 9 விக்கெட்டுகள் காலி.. மணிக்கட்டில் எலும்பு முறிவு; ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் ஒற்றை கையில் பேட்டிங்!

0
2094

9 விக்கெட்டுகளை இழந்த ஆந்திரா அணிக்கு, விரல் முறிந்தபோதும் இடது கையில் பேட்டிங் செய்து போராடி வருகிறார் கேப்டன் ஹனுமா விகாரி.

2022-23ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் காலு இறுதி சுற்றை எட்டியுள்ளது. நான்காவது காலிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆந்திர பிரதேசம் அணி முதல் நாள் முடிவில் 260 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் ஆட்டத்தின்போது கேப்டன் ஹனுமா விகாரிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால் ரிட்டையர்டு ஹர்ட் கொடுத்து பாதியிலேயே வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆந்திர பிரதேசம் அணிக்கு கீப்பர் ரிக்கி 149 ரன்களும் கிரண் ஷிண்டே 110 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு அவுட் ஆக, 353 ரன்களில் ஒன்பது விக்கெட்டுகளை ஆந்திர பிரதேசம் அணி இழந்தது.

மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தினால் வெளியில் இருந்த ஹனுமா விகாரி, விட்டுக் கொடுக்காமல் உள்ளே வந்தார். வழக்கமாக வலது கையில் பேட்டிங் செய்யும் அவர், இடது கையில் பேட்டிங் செய்தார். அதுவும் ஒற்றை கையில் பந்துகளை எதிர்கொண்டார்.

- Advertisement -

முக்கியமான காலிறுதி போட்டியில், அணியின் கேப்டன் இப்படி முன் நின்று இறுதிவரை போராடுவது பலருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது. இவரின் இந்த போராட்ட குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.