அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம்.. ஆர்சிபி வீரருக்கு அடித்த லக்.. கனடா டி20 தொடரில் சுவாரஸ்யம்

0
134

குளோபல் டி20 என அழைக்கப்படும் ஜி டி 20 கிரிக்கெட் போட்டிகள் வட அமெரிக்க நாடான கனடாவில் வைத்து நடைபெற்றது. ஆறு அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் மான்ட்ரியல் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது .

உலக அளவில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் கனடா நாட்டில் நடைபெறும் குளோபல் டி20 லீக் போட்டிகளும் முக்கியத்துவம் பெற்றதாகும் . உலகின் புகழ்பெற்ற வீரர்கள் பலரும் இந்த டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகின்றனர்

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஊராட்சி இந்த தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . 2023 ஆம் வருடத்திற்கான லீக் போட்டிகள் ஜூலை மாதம் 21ஆம் தேதி துவங்கிய நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு சர்ரே ஜாகுவார் மற்றும் மான்ட்ரியல் டைகர்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சர்வே ஜாகுவார் அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனைத் தொடர்ந்து ஆடிய மாற்றிகள் டைகர்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்று இலக்கை எட்டியதோடு கோப்பையையும் தட்டிச் சென்றது .

இந்தப் போட்டி தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷெஃபேன் ரூதர்போர்டு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டி சென்றார். இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதோடு இவரது சிறப்பான ஆட்டத்தை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலமும் தொடர் நாயகன் விருதோடு சேர்த்து இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது .

- Advertisement -

2023 ஆம் வருட குளோபல் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றதற்காக ஷெஃபேன் ரூதர்போர்டு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலத்தை பரிசாக பெற்று இருக்கிறார் . இவர் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் டெல்லி கேப்பிடல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் உரையாடி இருக்கிறார். கடந்த சீசனில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் வருடம் குளோபல் டி20 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் ஆடி இருக்கும் ஷெஃபேன் ரூதர்போர்டு 220 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும் . இவரது அதிகபட்ச ஸ்கோர் 84 மற்றும் சராசரி 44 மேலும் 130.18 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.