குஜராத் டு மும்பை.. மௌனம் கலைத்த ஹர்திக் பாண்டியா.. ஆகாஷ் அம்பானி பரபரப்பான வாழ்த்து!

0
2866
Hardik

16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் வீரர்களை டிரேடிங் செய்யப்பட்டதில, மிகவும் முக்கியத்துவமான நிகழ்வாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு மெகா ஏலத்தின் போது ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்த காரணத்தினால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவருக்குப் பின்பாக அணிக்கு வந்த சூரியகுமார் யாதவை தக்க வைத்தது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்குச் சென்று இசான் கிஷானை வாங்கியது. ஆனால் ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு வரும்படி மும்பை இந்தியன்ஸ் அணி கூறவில்லை. மாறாக இஷான் கிஷானையே ஏலத்திற்கு வரும்படியும் எந்த அணிக்கும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

ஏனென்றால் அந்த சமயத்தில் புதிய இரண்டு அணிகள் தங்களுக்கு மூன்று வீரர்களை ஏலத்திற்கு முன்பே வாங்கிக் கொள்ளலாம் என்கின்ற விதி இருந்தது. இப்படியான நிலையில்தான் ஏலத்திற்கு முன்பாகவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாக மாறி முதல் தொடரிலேயே கோப்பையையும் வென்று ஹர்திக் பாண்டியா அசத்தியிருந்தார்.

அவர் விரும்பியபடி கேப்டன் ஆகவும் மாறியதோடு இந்திய அணிக்கும் கேப்டனாகவும் வந்தார். மேலும் இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கோப்பை ஒரு முறை இறுதிப்போட்டி என மிகச் சிறப்பாக அவருக்கு குஜராத் டைட்டன்ஸ் அமைந்தது. ஆனால் இத்தனையையும் விட்டு மீண்டும் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்திருப்பது எல்லோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு மும்பை இந்தியன் அணிக்கு வந்தது குறித்து பதிவு செய்த ஹர்திக் பாண்டியா “இது பல அற்புதமான நினைவுகளை தருகிறது. மும்பை.. வான்கடே.. பல்தான்.. திரும்பி வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது மும்பை இந்தியன்ஸ்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறும் பொழுது “ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான ஹோம் கம்மிங். ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கும் ஒரு வலிமையான சமநிலையை அளிக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி உடன் அவருக்கு முதல் பயணம் சிறப்பாக அமைந்தது. போலவே அவருடைய இந்த இணைவில் இரண்டாவது பயணமும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!