தமிழ் பையன் சாய் சுதர்சன் வெறியாட்டம்… திக்குமுக்காடிய சிஎஸ்கே அணி.. கடின இலக்கு!

0
344

தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 ரன்கள் விளாசினார். முக்கியமான கட்டத்தில் அபாரமாக விளையாடி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குஜராத் அணி 214 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

குஜராத் அணிக்கு சகா மற்றும் கில் இருவரும் ஓபனிங் இறங்கினர். அபாரமான பார்மில் இருந்த கில் இந்த போட்டியில் 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த சாய் சுதர்சன் சகாவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட, இப்போது சகா தனது அதிரடியை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இவர் 39 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உட்பட 54 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இரண்டாவது விக்கெட்டிற்கு சாய் சுதர்சன் மற்றும் சகா ஜோடி 64 ரன்கள் சேர்த்தது.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா உள்ளே வந்தார். ஆனால் அவர் ஒருபுறம் சிங்கிள் எடுத்துக்கொடுக்க, சாய் சுதர்சன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரி மற்றும் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

முதல் 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்த சாய் சுதர்சன், அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். போட்டியின் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். இவரது ஆட்டம் குஜராத் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 47 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் அடித்துக் கொடுத்தார்.

கடைசியில் வந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 2 சிக்சர்கள் உட்பட 21 ரன்கள் அடிக்க, குஜராத் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விகெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் எட்டியது.

இந்த இலக்கை சேஸ் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லுமா? அல்லது குஜராத் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? என்பதை பார்ப்போம்.