ஐபிஎல் 2025

48 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த தமிழக விராட் கோலி.. ஐபிஎல் 2025.. GT vs SRH

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 51வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதில் சிறப்பாக விளையாடி வந்த குஜராத் அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

குஜராத் ஹைதராபாத் மோதல்

அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என்று அறிவித்தார். சன்ரைசர்ஸ் அணி கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நல்ல மனநிலையில் மீண்டும் திரும்பி இருக்கிறது. அதே வேளையில் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த குஜராத் அணி இந்த முறை வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் டாப் இடத்திற்கு மீண்டும் செல்லும் மனநிலையில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் இன்னிங்சை அணியின் கேப்டன் சுப்மான் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் துவங்கினார்கள். ஓவருக்கு 10 ரன்கள் என்கிற வீதத்தில் அருமையாக துவங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவர்களில் 87 ரன்கள் குவித்தது. இதில் 23 பந்துகளில் 9 பௌண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்த தமிழக விராட் கோலி என்று அழைக்கப்படும் சாய் சுதர்சன் அன்சாரி பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

சாய் சுதர்சன் சாதனை

இந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். 48 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட் பொருத்தவரை குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 2000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 59 இன்னிங்ஸ்கள் விளையாடி சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில் சாய் சுதர்சன் 54 இன்னிங்ஸ்களிலேயே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:10வது இடத்துக்கு பயந்துட்டு.. சிஎஸ்கே இதை ஒருபோதும் செய்யாது.. கம்பேக் தரணும்னு நல்லா தெரியும் – சிஎஸ்கே பேட்டிங் கோச் பேட்டி

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் 60 இன்னிங்ஸ்கள் விளையாடி 2000 ரன்கள் குவித்த வீரராக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் இருக்கிறார். மேலும் 61 இன்னிங்ஸ்கள் விளையாடி ஆர்சிபி வீரர்களான ராஜத் பட்டி தார் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன்பு வரை குஜராத் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -
Published by