நேற்று நடைபெற்ற முடிந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாய் கிஷோர் ஒரு குறிப்பிட்ட பவுலிங் கற்றுக்கொள்ள நான்கு வருடம் தேவைப்பட்டது என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல்லில் புதிய வகை பவுலிங்
குஜராத் அணியின் ஆஸ்தான சுழற் பந்துவீச்சாளராக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் திகழ்ந்து வருகிறார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் குறிப்பாக ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியாவுக்கு இவர் வீசிய கேரம் வகை பந்து அற்புதமாக இருந்தது.
வழக்கமாக வலது கை சுழற் பந்துவீச்சாளர்களே அதிகமாக கேரம் பந்துகள் பயன்படுத்தும் நிலையில், அரிதாக இடது கை சுழற் பந்துவீச்சாளர் சாய் கிஷோர் அவருக்கு இந்த வகையான பந்தினை வீசி அவரது விக்கட்டை சாய்த்தார். இந்த சூழ்நிலையில் இந்த டெக்னிக்கை கற்றுக்கொள்ள அவருக்கு 4 வருடம் தேவைப்பட்டது என அவரே சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
4 வருடங்கள் பயிற்சி செய்தேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “டி20 கிரிக்கெட்டில் பொருத்தமாக இருக்க நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நான் இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் இதை எங்கும் நான் பந்து வீசவில்லை. ஐபிஎல்லில் இந்த வகையான பந்தை வீசுவதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. எனது உள்ளுணர்வின் நம்பிக்கையின்படி நான் பந்து வீசச் சென்றேன்.
இதையும் படிங்க:3 போட்டியை வைத்து.. இந்த முடிவுக்கு வராதீங்க.. ரோஹித் யாருன்னு இப்போ நான் சொல்றேன் – கீரன் பொல்லார்ட் ஆதரவு
இது ஒரு கேரம் பந்து வகையை போன்றது. இதனால் நான் அதிக திறமையை பெறுகிறேன்” என்று சாய் கிஷோர் கூறியிருக்கிறார். கேரம் பந்து வகையான பந்துகளை வலது கை பந்துவீச்சாளர்களே அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில், அரிதாக இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் இந்த வகை பந்துவீச்சை பயன்படுத்தி விளையாடுகிறார் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். இவரது பந்து வீச்சு குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் தற்போது பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






