தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருவதற்கான தீர்வை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கிரேக் சேப்பல் கொண்டுவரப்பட்டார். அப்போது அவருடைய பல அதிரடியான முடிவுகள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும் கிரிக்கெட் உலகத்தில் இவருடைய கிரிக்கெட் அறிவுக்கு பெரிய மதிப்பு இன்று வரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் என்னிடம் கேட்டார்
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் பிரச்சனை குறித்து பேசிய கிரேக் சேப்பல் “சச்சின் என்னிடம் ஏன் வயதாகும் பொழுது பேட்டிங் பிரச்சனைகள் உருவாகிறது? உண்மையில் பேட்டிங் நன்றாக பழகி அப்பொழுதுதானே சுலபமாக இருக்க வேண்டும் என்று கேட்டார். வயதுக்கு ஏற்ப பேட்டிங் செய்வதில் தீவிரம் அதிகரிப்பதுதான் பிரச்சனைக்கு காரணம் என்பது குறித்து நான் சச்சினுக்கு விளக்கினேன்”
“ஒரு வீரருக்கு வயதாகும் பொழுது அவருடைய அனிச்சை செயல் மற்றும் கண் பார்வை குறைவடைகிறது. ஆனால் இதைவிட முக்கிய பிரச்சனை என்னவென்றால் நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான உங்களுடைய கவனங்கள் மிக தீவிரமாக மாறுவதுதான் உங்களுடைய பேட்டிங் திடீரென சரிவதற்கும் காரணமாக வயதாகும் பொழுது மாறுகிறது”
இதுதான் முக்கிய பிரச்சனை
“இளைய வீரர்கள் விளையாடுவது போல நீங்களும் விளையாட விரும்பினால், நீங்கள் இளைய வீரராக இருந்த பொழுது உங்களுடைய மனப்பான்மை மற்றும் சிந்தனை செயல்முறைகள் எப்படி இருந்ததோ மீண்டும் நீங்கள் அப்படியே மாற வேண்டும். ஆனால் ஒரு வயதாகும் வீரருக்கு இதுதான் மாற்றிக் கொள்ள முடியாத விஷயமாக அமைகிறது”
இதையும் படிங்க : சர்பராஸ் கான் 150 ரன் எடுத்தார்.. ஆனாலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதிங்க .. காரணம் இதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து
“வயதாகும் பொழுது ஒரு வீரருக்கு ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் கண்டிஷன் குறித்து எல்லாம் தெரிகிறது. இது அதிகபட்ச கவனத்தை உருவாக்குகிறது. ஆனால் ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு கவனம் இருக்காது. எனவே அவர் தன் போக்கில் சுலபமாக விளையாடுகிறார். அனுபவ வீரர்களால் இதை செய்ய முடியவில்லை. எனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தங்களுடைய மனப்பான்மை மற்றும் செயல்முறைகளை பழைய படி மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






