பும்ரா கிரிக்கெட் வாழ்க்கை முடியப்போகிறதா.. அவர் இதை செஞ்சே ஆகணும் – கிளன் மெக்ராத் அறிவுரை

0
54
Bumrah

தற்போது காயத்தில் இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து பேச்சாளர் மீண்டும் திரும்பி வரவும், காயம் இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு லெஜெண்ட் கிளன் மெக்ராத் அறிவுரை கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசும்பொழுது நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடியதின் காரணமாக எந்த நன்மையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்திய அணி சிறப்பாக விளையாடிய தொடரை வென்று இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்

தற்போது பும்ரா பற்றி பேசியிருக்கும் கிளன் மெக்ராத் கூறும்பொழுது “பும்ரா மற்ற பந்து வீச்சாளர்களை விட உடலுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கிறார். அந்த அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு வழிகளை முன்பு அவர் கண்டுபிடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லா நேரத்திலும் அவரால் அது முடியவில்லை. காயத்திலிருந்து முன்பு அவர் மீண்டும் வந்திருக்கிறார். அவருக்கு ஜிம்மில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் முன்பு இளமையாக இருந்தார் என்பது முக்கியம்”

“தற்போது அவருக்கும் வயதாகிறது என்கின்ற காரணத்தினால் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளராக கார் டிரைவர் மாதிரியானவர்கள். வேகமாக ஓட்டினால் எரிபொருள் சீக்கிரம் தீர்ந்து விடும். எனவே நீங்கள் சரியான வேகத்தில் பந்து வீச வேண்டும். நான் மெதுவான வேகத்தில் வீசிய காரணத்தினால்தான் அதிக காலம் விளையாடினேன்”

- Advertisement -

பும்ரா உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்

” நான் பும்ரா பந்து வீசுவதை பார்க்க எப்பொழுதும் ஆர்வமாக இருக்கிறேன். அவர் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அவர் பந்து வீசிய பொழுது ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்கக் கூடியவராக தெரிந்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் காயம் இல்லாமல் இருந்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும். இந்திய அணியில் அந்தத் தொடரில் அவரை கழித்து விட்டால் எதுவுமே கிடையாது”

இதையும் படிங்க : விராட்டுக்கு பிசிசிஐ செமையா இத செஞ்சது.. ஆனா எங்க பாகிஸ்தான்ல வாயை மூடவே மாட்டாங்க – சயித் அஜ்மல் பேட்டி

“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடிய விதத்திற்கு அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். ஸ்பின் டிராக்கில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். ஒரே மைதானத்தில் விளையாடியதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்தது என்று நான் நினைக்கவில்லை. இந்தியா இந்தியாவிலும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவிலும் விளையாடுவது நன்மை தரும் என்று கூறுவது போல் இது இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -