புவனேஷ்குமார் வேண்டாம்; டி20 உலகக்கோப்பை அணியில் இவரை ஆடவைங்க – ஹர்பஜன் சிங் கருத்து!

0
734

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சகரை உலக கோப்பை அணியில் எடுப்பது சிறப்பு என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றது. பெர்த் நகரில் இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்துவிட்டு மெல்பர்ன் நகருக்கு செல்கின்றனர். இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 23ஆம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடைசி நேரத்தில் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து விலகியதால் மாற்று வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அந்த இடத்திற்கு தற்போது வரை மூன்று வீரர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. முகமது சிராஜ், தீபக் சஹர் மற்றும் முகமது சமி ஆகியோர் ஆவர். முகமது சிராஜ் சமீப காலமாக டி20 போட்டிகளில் போதிய அளவில் விளையாடவில்லை. அதேநேரம் முகமது சமி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் இடம்பெற்று இருந்தார். திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதால் இரண்டு தொடர்களிலும் விளையாடவில்லை.

இந்த மூன்று வீரர்களில் தீபக் சகர் சற்று முன்னணியில் இருக்கிறார். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கூடுதல் நம்பிக்கையை தந்திருக்கிறார். மூவரில் தீபக் சஹர் பும்ராவிற்கு பதிலாக அணிக்குள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

அனுபவம் மிக்க வீரர் புவனேஸ்வர் குமார் ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் இருக்கிறார். ஆனால் ஆசியக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியா தொடர் என இரண்டிலும் பவர் பிளே ஓவர்களில் 8 முதல் 10 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், டெத் ஓவர்களில் படு மோசமாக வீசுகிறார். 18 வது மற்றும் 19வது ஓவர்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. கடைசி சில போட்டிகளில் குறைந்தது 15 முதல் 20 ரன்கள் அந்த இடத்தில் விட்டுக் கொடுக்கிறார். இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது.

- Advertisement -

இதன் அடிப்படையில் இவரை வெளியில் வைத்து விட்டு தீபக் சகர் உள்ளே எடுத்து வரப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.

“தீபக்சாகர் பவர் பிளே ஓவர்களில் இன்- சுவிங் மற்றும் அவுட்-ஸ்விங் வீசி ரன்களை கட்டுப்படுத்துகிறார். பவர் பிளேவில் இரண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இது மிகப்பெரிய அளவில் எடுபடும். தீபக்சேகர் 10 ரன்களுக்கும் குறைவாகவே டெத் ஓவர்களில் கொடுக்கிறார். அதிகபட்சம் ஒரு ஓவர் இவருக்கு டெத் ஓவர்களில் கொடுக்கப்படலாம். அதிலும் குறைந்த ரன்களே விட்டுக் கொடுப்பதால் புவனேஷ்வர் குமாரை விட இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுப்பது சிறப்பாக இருக்கும்.” என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்தார்.