கில் 1.26 மணிக்கு ஆசிய கோப்பையில் இல்லை.. 1.34-க்கு இருக்கிறார்.. 8 நிமிடத்தில் என்ன நடந்தது?

0
8441
Gill

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட் அணி நிர்வாகங்களும் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்த ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு சற்று முன் வெளியிடப்பட்டது.

இந்திய அணி நிர்வாகத்தில் எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன இடங்கள் என்கின்ற குழப்பம் ஏற்கனவே நிலவி வருகின்ற நிலையில், அணி அறிவிப்பும் பெரிய குழப்பத்தில் ஆரம்பித்து, எட்டு நிமிட இடைவெளியில் சரியாகி இருக்கிறது.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மதியம் 1:26க்கு வெளியானது.

இதற்கு அடுத்த எட்டு நிமிடங்கள் கழித்து மதியம் 1:34க்கு சுப்மன் கில் ஆசியக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்கின்ற செய்தி வெளியானது. இதன் காரணமாக பலரும் தவறான செய்திகளை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

அணி அறிவிப்பை கேப்டன் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தங்களது டெல்லி சந்திப்புக்கு பிறகு வெளியிட்டனர். இதை தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. அந்த ஒளிபரப்பில் இடம்பெற்ற தவறான செய்தியின் காரணமாக, சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை என்பது வெளிவந்து விட்டது.

- Advertisement -

தற்பொழுது இந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து முழு அணி வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் சாகல் நீக்கப்பட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சன் பேக் அப் வீரராக தொடர்கிறார். பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆப் ஸ்பின் ஆப்ஷனுக்கு பந்துவீச்சாளர் அல்லது ஆல்ரவுண்டர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக ரவீந்திர ஜடேஜா போல் பந்து வீசும் அக்சர் படேல் தொடர்கிறார்.

மேலும் இந்த அணிக்கு துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்பொழுது அப்படி எதுவும் செய்யாமல் ஹர்திக் பாண்டியாவே துணை கேப்டனாக நீடிக்கிறார்.

ஆசியக் கோப்பை இந்திய அணி :

ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

பேக் அப் வீரர் சஞ்சு சாம்சன்.