ஹர்திக் பாய் இதை என்கிட்ட சொன்னார் அதை அப்படியே செய்தேன்! – ஆட்டநாயகன் அசத்தல் பேட்டி!

0
1105
Gill

2023 வருடத்தின் துவக்கத்தில் இலங்கை அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்து திரும்பியது!

இதற்கு அடுத்து நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி தற்பொழுது தோல்வியடைந்து இருக்கிறது!

- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடந்த டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருக்க இன்று தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டியில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதற்கு அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 12.1 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பெற்ற சுப்மன் கில் பேசும் பொழுது ” பயிற்சி செய்தது ஆட்டத்தில் பலனளிக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய ஒரு ஸ்கோரை அணிக்காக அடித்ததில் மகிழ்ச்சி. சிக்ஸர் அடிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டெக்னிக் இருக்கும். நான் பேட்டிங் செய்யும்பொழுது ஹர்திக் பாண்டியா பாய் நான் எப்படி இயல்பாக விளையாடி அடிப்பேனோ அப்படியே செய்ய சொன்னார். நான் அப்படியே செய்தேன். நீங்கள் உங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் பொழுது அதில் சோர்வு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் இந்திய அணிக்காக மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவதில் மகிழ்ச்சியே அடைகிறேன்!” என்று கூறியுள்ளார்!