ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? – பிளேயிங் லெவனில் இவருக்கு இடம் கொடுங்கள், நான் இவரோட பெரிய ஃபேன் – கில்கிறிஸ்ட் கருத்து!

0
10119

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட்.

- Advertisement -

தற்போது இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால், அது ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் இருவரையும் அணியில் எடுத்தால் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். 

அதே நேரம் ரிஷப் பண்ட் சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அடிக்கடி தவறான ஷார்ட் ஆடுகிறார். இதன் காரணமாக ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் ரன் மழை பொழிந்து அணியின் ஸ்கோரை உயர்த்துகிறார். ஆனால் 15 ஓவர்களுக்கு முன்னதாகவே களம் இறங்கிவிட்டால் சற்று நிதானமாக விளையாடுகிறார். அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த சிக்கலை ஆல்ரவுண்டர்கள் வைத்து தீர்க்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இதற்கு தீர்வு கூறும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். “என்னை பொறுத்தவரை இருவரையும் விளையாட வைக்கலாம். ஆனால் யாரேனும் ஒருவர் மட்டும் எடுக்க வேண்டும் என்று இருந்தால், நான் தினேஷ் கார்த்திக்கை வெளியில் வைத்து விட்டு ரிஷப் பண்ட்டை உள்ளே எடுப்பேன். மிகவும் தைரியமான வீரர். எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பந்துவீச்சை எந்த தருணத்திலும் துவம்சம் செய்யக்கூடியவர். எந்த நேரத்திலும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடியவர். இவர் களத்தில் இருந்தால் சிறிது நம்பிக்கை கிடைக்கும். கீழ் வரிசையில் இப்படி இதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய ஒரு வீரர் ஒவ்வொரு அணிக்கும் அவசியம் தேவை.” என்று விளக்கமளித்தார்.

- Advertisement -