“டெஸ்ட் விளையாடற மனநிலை இல்லை.. இந்திய பேட்ஸ்மேன்கள் இதை செய்தால்தான் ரன் வரும்” – கவாஸ்கர் அறிவுரை

0
433
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரையில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டிலும் இரண்டு அணிகள் தலா ஒரு போட்டியை வென்று தற்பொழுது தொடர் சமநிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் அனுபவம் வாய்ந்ததாகவும் அதே சமயத்தில் அதிரடியாக விளையாடக் கூடியதாகவும் இருக்கிறது. இவர்கள் எதிர்த்து விளையாடும் இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒன்று.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் பவுலிங் யூனிட் மிகவும் அனுபவம் மற்ற ஒரு கூட்டணியை கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த அனுபவம் மற்ற கூட்டணிக்கு எதிராக மிக மோசமாகத் தடுமாறி வருகிறார்கள்.

சுழல் பந்துவீச்சை விளையாடுவதில் இந்தியா பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் என்று எப்பொழுதும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் சமீப காலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி வருகிறது. அனுபவமற்ற சுழல் பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட்டை வாரி கொடுக்கிறார்கள்.

கடந்த முறை இங்கு ஆஸ்திரேலியா இரண்டு அனுபவம் மற்ற சுழற் பந்துவீச்சாளர்களை கூட்டி வந்தது. அந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டை கொடுத்தார்கள். தற்பொழுது இங்கிலாந்து அணி கூட்டி வந்திருக்கும் மூன்று அனுபவமற்ற சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட்டை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்

- Advertisement -

இந்தப் பிரச்சினையை சரி செய்ய பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “பேட்ஸ்மேன்கள் பெரியவர்கள் எடுக்காமல் தோல்வியடைகின்ற பொழுது, பொதுவாக பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான மனநிலைக்குள் வருவதற்கு, அதற்கு முன்பாக உள்நாட்டில் ரஞ்சி கிரிக்கெட்டில் இரண்டு போட்டிகளாவது விளையாடுவது மிகவும் முக்கியம். நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு இது அவசியமாகிறது.

இதையும் படிங்க : “இந்தியாவுக்கு எப்படியோ.. எங்களுக்கு திரும்ப அந்த வீரர் இந்திய அணிக்கு வரனும்” – மெக்கலம் பேச்சு

ரஞ்சி டிராபி தொடங்கிவிட்டது. இதில் இரண்டு போட்டிகள் விளையாடுவதின் மூலமாக, அடுத்து சர்வதேச டெஸ்ட் தொடருக்கு வீரர்கள் தங்களை தயார் படுத்த முடியும். இது ரஞ்சி தொடர் விளையாடுவதற்கு சரியான நேரம்” எனக் கூறியிருக்கிறார்.