கேஎல் ராகுலுக்கும் மத்தவங்களுக்கும் இதுதான் வித்தியாசம்.. 45 நிமிட மரியாதை 5 மணி நேர ஆட்சி – கவாஸ்கர் விளக்கம்

0
148

இந்திய அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கும் கேஎல்.ராகுல் விளையாடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று சுனில் கவாஸ்கர் விளக்கி பேசி இருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் ஒரு சதம் அடித்து இருந்தாலும் கூட, கேஎல்.ராகுல் பின்பற்றும் பேட்டிங் டெக்னிக்தான் மிகவும் பாதுகாப்பானதாகவும் அணிக்கு தாக்கத்தை கொடுக்கக் கூடியதாகவும் அமைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

- Advertisement -

மீண்டும் காப்பாற்றிய கேஎல்.ராகுல்

நேற்று மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து விளையாடும் பொழுது 150 ரன்னுக்கு உள்ளாக ஆல் அவுட் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் தெரிந்தது. கேஎல்.ராகுல் 31 ரன் உடனும், கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று ரோஹித் சர்மா மேற்கொண்டு பத்து ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் ரவீந்திர ஜடேஜாவை வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல்.ராகுல் அரைத்ததம் அடித்து 83 ரன்கள் எடுத்து ஸ்மித்தின் அற்புதமான கேட்ச் மூலம் ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் ரவீந்திர ஜடேஜாவும் அரை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி தற்போது 200 ரண்களை கடந்து இருக்கிறது.

- Advertisement -

மற்றவர்களிடமிருந்து வேறுபடும் இடம்

இந்தத் தொடரில் கேஎல்.ராகுல் அடித்த இரண்டாவது அரைசதமாக இது பதிவாகி இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறி வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரராக கேஎல்.ராகுல் மிகச் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர் கிரீசில் வலிமையாக இருக்கிறார். அவருக்கு ஒரு சிறிய ட்ரிகர் பாயிண்ட் இருக்கிறது. அவருடைய தலை எப்பொழுதும் நிமிர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக ஆப் ஸ்டெம்ப் எங்கே இருக்கிறது என்று தீர்மானிக்கவும், அடுத்து பந்தின் லைன் என்னவென்று முடிவு செய்யவும் அவருக்கு எளிதாக இருக்கிறது”

இதையும் படிங்க : 40% ரன்.. ரோகித் சர்மா அந்த ஆஸி வீரரை பார்த்தாலே பயப்படுகிறார்.. ரொம்ப கஷ்டம் – மைக்கேல் வாகன் பேச்சு

“இதன் காரணமாக அவரால் பந்தை விட்டு வெளியேற முடிகிறது. பந்து புதியதாக மிகவும் ஹார்டாக இருக்கும் பொழுது எப்பொழுதும் பந்து வீச்சாளர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அவர்களுக்கு முதல் 45 நிமிடம் ஆவது மரியாதை கொடுக்க வேண்டும். பிறகு 5 மணி நேரம் உங்களுடையதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -