அடுத்த 2 தொடர்களுக்கு ரஹானேவை நீக்கிவிட்டு இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் – கௌதம் காம்பீர் ஆலோசனை

0
195
Ajinkiya Rahane and Gautham Gambhir

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் சமநிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டியை வென்று விட்டால் இந்திய அணி முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும். இது நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அத்தனை இந்திய அணி வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் கோலி 79 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன்பின்பு விளையாட ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணிக்கு அந்த அணியின் கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இவரை சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் யாரும் அவரைச்சுற்றி நிலைத்து நின்று விளையாடாத காரணத்தினால் தென்னாபிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போதைய இந்திய அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த முக்கியமான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகவும் மோசமாக விளையாடிய இந்திய வீரர் ரகானே ஆவார். மூத்த வீரராக இருந்த போதும் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து அவுட்டாகி கொண்டே வருகிறார் ரகானே. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 9 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன்னும் மட்டுமே எடுத்துள்ளார் ரஹானே.

- Advertisement -

இதன் காரணமாக பல்வேறு முறை இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. தற்போது இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கௌதம் காம்பீர் பேசுகையில், இனி ரகானேவுக்கு பதிலாக அணியில் விஹாரிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ரகானே மோசமாக விளையாடினாலும் அவரை தொடர்ந்து அணியில் எடுத்து வந்தது போல விஹாரியையும் இன்னும் இரண்டு மூன்று தொடர்களுக்கு அப்படிச் செய்ய வேண்டும் என்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ஒரளவு அதிக ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு நல்ல இலக்கை வைக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த டெஸ்டை வென்று தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.