இந்தியாவின் அந்த உ.கோ-பை தோல்விக்கு மட்டும்தான் விடிய விடிய அழுதேன்.. ஆனா 2011 மகிழ்ச்சி இல்ல – கம்பீர் பேட்டி

0
472
Gambhir

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக வருவார் என பலராலும் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய உலகக் கோப்பை அனுபவங்களை கவுதம் கம்பீர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் அவர் 1992 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடையும், அந்த போட்டி தன்னை எப்படி பாதித்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அந்த ஒரு போட்டியை பார்த்து நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உண்மையில் நான் அன்று இரவு முழுவதும் அழுதேன். அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ நான் அப்படி எதற்குமே அழுதது கிடையாது.

அப்போது எனக்கு 11 வயது நான் இரவு முழுவதும் அழுதேன் என்று சொன்னேன். நான் அப்பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992ல் முடிவு செய்து 2011ஆம் ஆண்டு நிறைவேற்றினேன்.ஆனால் அந்தப் போட்டிக்குப் பிறகும் கூட நான் மகிழ்ச்சியாற்றவனாகவே இருந்தேன். ஆனாலும் நான் தனிப்பட்ட முறையில் வேறு எதற்கும் அந்த அளவிற்கு அழுது கிடையாது

உண்மையில் நான் யாரையுமே பின்தொடர்ந்தது இல்லை. இந்த உண்மையை நான் சொல்லும் பொழுது இதற்காக நான் விமர்சனம் செய்யப்பட்டு இருக்கிறேன். பலரும் ஏன் இப்படி சொல்கிறார் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஏன் என்றே தெரியவில்லை நான் யாரையும் பின் தொடரவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிம்பாப்வே தொடர்.. முக்கிய இந்திய வீரர்களுக்கு பதிலாக 3 பேர் சேர்ப்பு.. உலக கோப்பையால் வந்த சிக்கல்

நமக்கு எப்பொழுதும் ஒரு ரோல் மாடல் தேவை என்று நான் நினைத்ததில்லை. நீங்கள் சுயமாக இருக்க வேண்டும். நான் எப்பொழுதும் சுயமாக இருக்க முயற்சி செய்தேன். யாரையாவது ரோல் மாடலாக வைத்திருப்பவர்கள் அவர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். நான் இப்பொழுது வரை யாரையும் கண் மூடித் தனமாக பின்பற்றியது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.