ஹர்திக் பாண்டியா செய்ய நினைப்பது தவறு.. எச்சரிக்கை கொடுத்த கம்பீர்

0
511

இந்திய டி20 அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தவறான யுத்தியை கையாள்வதாக கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே இருந்தோம். இதனால் இந்த முடிவு எனக்கு கவலை இல்லைம் காரணம் இருதரப்பு தொடர்களில் எங்கள் அணியை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளி சவால்களை சந்திக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

- Advertisement -

இது போன்ற இருத்தரப்பு தொடர்களில் நம்மை நாமே நெருக்கடிக்கு ஆழ்த்தினால் மட்டுமே பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாட முடியும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.  அவரின் இந்த பேச்சு பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர் , ஹர்திக் பாண்டியா சொன்ன காரணம் புதிதாக இருக்கிறது. ஆனால்  இருதரப்புத் தொடர் மிகவும் முக்கியம் தொடரை முதலில் நீங்கள் கைப்பற்ற வேண்டும்.

அதன் பிறகு தான் இப்படி தைரியமான முடிவு எடுக்க வேண்டும். இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம். அதற்காகத்தான் ரசிகர்கள் போட்டியை பார்க்கிறார்கள். இதனால் அணியை நெருக்கடிக்கு தள்ள வேண்டும் என ஹர்திக் பாண்டியா கூறி டாஸ் வென்று பந்து வீசாமல் பேட்டிங் தான் தேர்வு செய்வேன் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அல்ல நீங்கள் தொடரை வென்று விட்டு சமிபிரதாய போட்டியின் அதனை செய்தால் உங்களை யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை என்று கௌதம் கம்பீர் அறிவுறுத்தினார்.

இதேபோன்று கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசாமல் அக்சர்பட்டேலை வீச சொன்னதும் சரியான முடிவு அல்ல என்றும், ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவர்தான் அந்த ஒவ்வொரு வீசி இருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தீஸ்குப்தா அறிவுறுத்தி உள்ளார். எனினும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ஹர்திக் செய்த இந்த தவறு வெளியே தெரியாமல் போய்விட்டது .

- Advertisement -