சொன்ன வாக்கை காப்பாற்றிய கங்குலி.. அன்கேப்டு வீரருக்கு 7.20கோடி.. என்ன நடந்தது?

0
1782
Ganguly

நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சில ஆச்சரியமான விற்பனைகள் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வீரர்கள் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் மேல் செய்யப்பட்ட முதலீடு ஈர்ப்பயோ, ஆச்சரியத்தையும் பெரிதாக உண்டாக்கவில்லை.

ஆனால் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு தேர்வாகாத இளம் இந்திய வீரர்கள் சிலரின் மேல் ஐபிஎல் அணிகள் செய்துள்ள பெரிய முதலீடு எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. மேலும் அந்த வீரர்கள் யார்? அவர்களுடைய சிறப்பு என்ன? என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அனுபவ வீரர்கள் மேல் மட்டுமே பெரிய முதலீடு செய்யும் சிஎஸ்கே, நேற்று அன்கேப்டு சமீர் ரிஸ்வி மீது 8.40 கோடி முதலீடு செய்தது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் குமார் குஷ்கரா எனும் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மீது 7.20 கோடி ரூபாய் முதலீடு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர் தற்போது ஜார்க்கண்ட் மாநில அணிக்காக விளையாடுகிறார். இவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், தேவைப்பட்டால் அதிரடிக்கு மாறவும் முடியும். அதே சமயத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் இருந்தால் அதற்கேற்றவாறு அதிரடியாகவும் ஆட முடியும். ஒட்டுமொத்தமாக முழுமையான பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்.

மேலும் இவர் விக்கெட் கீப்பிங் மிகவும் திறமையானவர். இவர் விக்கெட் கீப்பிங் செய்யும் முறையை பார்த்து, சவுரவ் கங்குலி இவரை மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்திருக்கிறது. மேலும் உள்நாட்டு தொடர்களில் இவர் பேட்டிங்கில் வெளிப்படுத்திய அணுகுமுறை கங்குலியை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சி முகாமில் குமார் குஸ்கரா பரிசோதிக்கப்பட்ட பொழுது, அவருடைய திறமையால் ஈர்க்கப்பட்ட கங்குலி அவருக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கிறார், அதை ஏலத்தின் போது செய்தும் முடித்திருக்கிறார்.

இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் சசிகாந்த் கூறும்பொழுது ” ஈடன் கார்டனில் நடந்த பரிசோதனை முயற்சிகளின் முடிவில், இந்த இளம் வீரரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கும் என்றும், ஏலத்தில் பத்து கோடி ரூபாய் வரை டெல்லி அவருக்காக செல்லும் என்றும் கங்குலி உறுதி கொடுத்திருந்தார்.

மேலும் கங்குலி இந்த இளம் வீரரின் சிக்ஸர் அடிக்கும் திறன் மற்றும் ஆட்ட திறன் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மேலும் இவர் விக்கெட் கீப்பிங் செய்யும் முறை மகேந்திர சிங் தோனியை கொஞ்சம் ஒத்து இருப்பதாகவும் கூறி பாராட்டி இருந்தார்!” என்று கூறியிருக்கிறார்!