“கம்பீர் கோலிய தாராளமா திட்டலாம்.. காரணம் இதுதான்!” – பிரவீன் குமார் பேட்டி!

0
174
Virat

2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரவீன் குமார், வாழ்க்கையில் தனிப்பட்ட சில காரணங்களால் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளேயே இருந்தார்.

தற்பொழுது அவர் வெளியில் வந்து கிரிக்கெட் உலகில் அதிர்வு தரும் பல விஷயங்களை தொடர்ச்சியாக பேசி வருகிறார். அணிக்குள் வீரர்கள் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் எப்படி இருந்தது, தன் தனிப்பட்ட வாழ்க்கையில் உண்டான மோசமான விஷயங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்த வகையில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாட விரும்பவில்லை என்றும், டெல்லி அணிக்கு விளையாட விரும்பியதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அப்பொழுது ஐபிஎல் குழுவில் மிகப்பெரிய ஆளாக இருந்த லலித் மோடி தன்னை மிரட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட வைத்ததாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இவர் ஐபிஎல் தொடரில் தனது ஆரம்பம் மூன்று ஆண்டு காலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். இதன் காரணமாக இவருக்கு தனிப்பட்ட முறையிலேயே விராட் கோலி உடன் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

எனவே இவரிடம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மைதானத்திலேயே விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இருவரிடையே நடைபெற்ற சூடான விவாதங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து பேசிய பிரவீன் குமார் ” விராட் கோலி பிக் பாய். அவருக்கு எப்படி ரன் அடிக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். அவர் தனது உடல் தகுதியை மேம்படுத்த கடுமையாக உழைத்து சரியான உணவு பழக்க வழக்கத்தை வைத்திருக்கிறார். அவரின் இளைய சகோதரர் போன்றவர்.

கம்பீர் வயதில் மூத்தவர். அவர் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். அண்ணன் தம்பியை திட்டினாலும் தப்பில்லை. அவர் பெரியவர் அவர் திட்டலாம்” என்று கூறியிருக்கிறார்.