இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விஷயத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என கம்பீர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதே சமயத்தில் ஒரு மனிதராக தவறுகள் செய்வதற்கான உரிமைகள் தனக்கும் உள்ளதாகவும், ஆனால் தான் தவறே செய்திருந்தாலும் அது நல்ல நோக்கத்திற்காகத்தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
கம்பீர் கொள்கை
இந்திய கிரிக்கெட்டில் தனி ஒரு வீரரை கடவுள் அளவுக்கு போற்றும் பழக்கம் கம்பீருக்கு பிடிக்காத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அவர் எப்பொழுதும் அணியை மட்டுமே முன்னிறுத்தி விளையாட வேண்டும் மீடியாக்களும் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடரை என்ற பிறகு தான் ஒரு பயிற்சியாளராக சூப்பர் ஸ்டார்களை உருவாக்க விரும்பவில்லை எனவும் சூப்பர் அணியை உருவாக்க விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார். குறைந்தபட்சம் தான் பயிற்சியாளராக இருக்கும் காலம் வரையில் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நான் இப்படியே செயல்படுகிறேன்
இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “நான் ஒரு மனிதன் தவறு செய்யும் உரிமை எனக்கும் இருக்க வேண்டும். கடந்த 18 மாதங்களில் நானும் சில தவறுகள் செய்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் செய்த தவறுகள் நல்ல நோக்கத்திற்கானது. ஒரு தவறு நல்ல நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் ஒரு தவறு தவறான நோக்கத்திற்காக இருக்கக் கூடாது”
இதையும் படிங்க: 2026 ஐபிஎல் ஜெயிக்க அந்த அணிக்கு ஒரு வழி தான் இருக்கு.. டேலண்டான அந்த பையன மேல அனுப்புங்க – சுரேஷ் ரெய்னா கருத்து
“நான் நேர்மையாக செய்யும் வரையில், அணி வீரர்கள் அனைவரிடமும் நேர்மையாக இருக்க முடியும் வரையில், அவர்களின் கண்களைப் பார்த்து பேச முடிகிற வரையில், நான் எனது பொறுப்பில் நியாயமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். மேலும் நான் நிம்மதியாகவும் இருப்பேன். அதே சமயத்தில் சமூக வலைதளங்களில் வரக்கூடிய எல்லா கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.






