டி20 உலகக் கோப்பை 2024

ஜிம்பாப்வே தொடர்.. கம்பீரை வைத்து மாஸ் பிளான்.. செலக்ட் ஆகும் 4 இளம் வீரர்கள்.. பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான தேர்வு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வருவதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் ஜூன் முதல் வாரத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஜூலை மற்றும் ஆகஸ்டில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கு தேர்வாக வாய்ப்புள்ள வீரர்கள் குறித்த தகவல்கள் பிசிசியை தரப்பில் கசித்திருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருகிறார் என்று கூறப்படுகிறது. அவர் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அரைசதம் அடித்திருந்தார். எனவே அவரை அணியை விட்டு நீக்க முடியாது என பிசிசிஐ தரப்பு கூறுகிறது.

மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்ததும், உடனே ஒரு வாரத்தில் இந்திய அணி ஜூலை மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 6ம் தேதி ஆரம்பித்து ஜூலை 14ம் தேதி முடிகிறது.

மேலும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு ஓய்வு தரப்படாது என்று தெரிகிறது. இருவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக தொடர்ந்து ஜிம்பாப்வே செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இத்தோடு பெங்களூரில் அமைந்திருக்கும் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ், ரியான் பராக், ஹர்சித் ராணா மற்றும் யார் தயால் போன்ற இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதிலிருந்து சில வீரர்கள் ஜிம்பாப்வே டி20 தொடருக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது டி20 உலகக் கோப்பை தொடரில் ரிசர்வ் வீரர்களாக இருக்கும் கில், கலில் அகமது, ரிங்கு சிங், ஆவேஷ் கான் ஆகியோரும் செல்வார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சூப்பர் 8.. ஆப்கானுக்கு எதிரா இந்த 4 பேர்தான் இந்தியாவுக்கு முக்கியமானவங்க.. ரோகித் இல்ல – இர்பான் பதான் கணிப்பு

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் கடைசியாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அரைசதம் அடித்திருக்கிறார். எனவே அவரை நிச்சயம் நீக்க முடியாது. மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களிலிருந்தும் சில வீரர்கள் ஜிம்பாப்வே செல்வார்கள்” என்று கூறியிருக்கிறார். இதில் முக்கியமாக அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், நிதீஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் இருக்கலாம்!

- Advertisement -
Published by